உடலுக்கு போஷாக்கு மற்றும் இளமையை தக்க வைக்கவும், புரத அளவை அதிகப்படுத்தவும் விட்டமின் கல் முக்கியமானவை. அவை பழங்களில்தான் அதிகம் காணப்படுகின்றன. பழங்கள் மிகவும் விசேஷமானவை.
பழங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. அழகையும் அதிகப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாதல்ல. சருமம் சுருக்கமில்லாமல், மினுமினுப்போடு, போஷாக்கு கூட வேண்டுமென்றால் இந்த பழங்களை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.
மாம்பழம் : விட்டமின் ஈ, ஏ, கே, சி கொண்டவை. இவற்றிலுள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் சரும பாதிப்பை தடுக்கின்றன.. முதுமையை வராமல் காக்கின்றன. சருமத்தை இருக்கி, சுருக்கமில்லாமல் பாதுகாக்கும். மாம்பழத்தின் சதைப் பகுதியால் முகத்தில் மசாஜ் செய்தால் தனி களை முகத்தில் உண்டாகும்.
எலுமிச்சை : விட்டமின் சி அதிகம் உள்ளதால் சுருக்கங்களை வராமல் காக்கும். அடிக்கடி உனவில் சேர்த்துக் கொள்வதோடு எலுமிச்சை சாறில் சிறிது வெண்ணெய் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் சருமம் இளமையாக இருக்கும்.
பப்பாளி : பப்பாளியிலுள்ள விட்டமின் ஏ சுருக்கங்களை வராமல் பாதுகாக்கும். அதிலுள்ள பெப்பெய்ன் என்சைம் இறந்த செல்களை சருமத்திலிருந்து வெளியேற்றும். பப்பாளியை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதோடு சருமத்திற்கும் பூச வேண்டும்.
வாழைப்பழம்: வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம் கூந்தல் மற்றும் சருமத்திற்கு மிக நல்லது. பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் போட்டால் அட்டகாசமான இளமையான சருமம் கிடைக்கும். தினமும் இரு வாழைப்பழம் சாப்பிட்டால் சருமத்தின் தன்மை மாறும்
ஆப்பிள் : ஆப்பிளில் உள்ள சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு உகந்ததுபோலவே சரும சுருக்கத்திற்கும் மிக நல்லது. ஆப்பிளை தினமும் சாப்பிடுவதால் ஃப்ரீரேடிகல்ஸ் அழிக்கப்படுகின்றன. இதனால் புதிய செல்கள் பெருகும் இள்மையை தக்க வைக்க உதவும். ஆப்பிளை மசித்து பாலுடன் கலந்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.