25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201706151519211876 Gongura Chicken. L styvpf
அசைவ வகைகள்

ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன்

சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரியாணியுடன் சாப்பிட கோங்கூரா சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று கோங்கூரா சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆந்திரா ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன்
தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ
புளிச்சக்கீரை / கோங்குரா – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1+1
பச்சை மிளகாய் – 6
இஞ்சி பூண்டு நறுக்கியது – தலா 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் குவியலாக
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவைக்கு.

201706151519211876 Gongura Chicken. L styvpf

செய்முறை :

* கீரையை நன்றாக மண் போக அலசிக் கொள்ளவும். பின்பு இலையை மட்டும் உபயோகிக்கவும்.

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் சுத்தம் செய்த கீரை, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இது வெண்டைக்காய் மாதிரியே கொஞ்சம் கொழ கொழன்னு வரும். கீரை நல்ல புளிப்பாக இருக்கும். நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

* அடுத்து சிக்கனை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.

* மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சிக்கன் சுவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும்.

* அரை கப் தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி வேக விடவும்.

* சிக்கன் வெந்த பின்பு தயார் செய்த கோங்குரா விழுதை சேர்த்து ஒரு சேர கலந்து விடவும். நன்றாக கொதித்து சிக்கனும் கீரை விழுதாக சேர்ந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

* கீரையே புளிக்கும், தயிரோ தக்காளியோ சேர்க்க தேவையில்லை. இதற்கு காரம்,உப்பு சிறிது அதிகமாகத் தேவைப்படும்.

* சுவையான ஆந்திரா கோங்கூரா சிக்கன் ரெடி.

* இது சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரியாணியுடன் கூட பரிமாறலாம். பருப்பு சோற்றுடன் சூப்பர்.

Related posts

சுவையான முட்டை குருமா செய்வது எப்படி

nathan

கணவாய் மீன் பொரியல்

nathan

உருளைக்கிழங்கு மீன் குழம்பு,

nathan

சூடான சுவையான சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸ்!

nathan

சுவையான கேரளா ஸ்டைல்: இறால் பெப்பர் ப்ரை

nathan

ஆஹா என்ன சுவை! காரைக்குடி நண்டு மசாலா

nathan

கிரீன் சிக்கன் குழம்பு

nathan

சுவையான கொத்து கோழி

nathan

சூப்பரான கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட்

nathan