31.5 C
Chennai
Thursday, Jul 3, 2025
1493294168 5209
அசைவ வகைகள்

புதுமையான புதினா இறால் குழம்பு செய்ய தெரிந்து கொள்வோம்…

கடல் உணவுகளில் ஒன்றான இறாலை சமைத்து அளவாக சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இது கோடைகாலம் என்பதால், உடலுக்கு புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தரும் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

இறால் – 200 கிராம்
புதினா – 1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது)
கொத்தமல்லி – 1/2 கட்டு (சுத்தம் செய்தது)
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
பூண்டு – 5 பற்கள்
பச்சை மிளகாய் – 1-2
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் – 100 மி.லி
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – 1 1/2 கப்

செய்முறை:

இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான புதினா இறால் குழம்பு தயார். இதனை சாதத்துடன் சாப்பிடலாம். கொஞ்சம் ட்ரை ஆக்கி சைடு டிஷ் ஆகவும்வும் சாப்பிடலாம்.1493294168 5209

Related posts

இப்தார் விருந்துக்கு சிக்கன் நகட்ஸ் தயாரிப்பது எப்படி? சிம்பிள் விளக்கம்!!

nathan

மலபார் சிக்கன் ரோஸ்ட்

nathan

சுவையான கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ப்ரை

nathan

கணவாய்ப் பொரியல்

nathan

சுவையான முட்டை சுக்கா

nathan

பாத்தோடு கறி

nathan

அவசர பிரியாணி

nathan

இலகுவான மீன் குழம்பு

nathan

சிக்கன் நக்கட்ஸ்-chicken nuggets

nathan