நீங்கள் பயன்படுத்தும் ரேசர் பழையதாகிவிட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று தெரியவில்லையா? பொதுவாக ரேசர் பழையது ஆகி விட்டால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு வெளிக்காட்டும். என்ன தான் ரேசர் பார்க்க நன்றாக இருந்தாலும், அதன் வாழ்நாள் முடிந்துவிட்டால், அது நம் சருமத்தை பதம் பார்க்க ஆரம்பிக்கும்.
இங்கு ஒருவர் பயன்படுத்தும் ரேசர் பழையதாகிவிட்டால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அறிகுறி #1 உங்களது ரேசர் தூக்கி எறியும் நிலைக்கு வந்துவிட்டால், அதில் வெள்ளை நிறத்தில் ஒரு படலம் படர்ந்திருக்கும். இப்படி உங்கள் ரேசர் இருந்தால், அதை தூக்கி எறிந்துவிட்டு, புதிதாக வாங்க வேண்டுமென்று அர்த்தம்.
அறிகுறி #2 ஷேவிங் செய்த பின், உங்கள் சருமம் மென்மையாக இல்லாவிட்டால், ரேசர் பழையதாகிவிட்டது என்று அர்த்தம். என்ன தான் பார்க்க புதிதாக காணப்பட்டாலும், இம்மாதிரியான ரேசரைத் தூக்கி எறிந்துவிடுங்கள்.
அறிகுறி #3 ஷேவிங் செய்யும் போது, காயங்கள் அதிகம் ஏற்பட்டாலோ அல்லது கடுமையான எரிச்சலை அனுபவித்தாலோ, ரேசரை மாற்ற வேண்டும் என்று அர்த்தம்.
அறிகுறி #4 முக்கியமாக உங்களது ரேசர் பழையதாகிவிட்டால், ஷேவிங் செய்த பின், பிம்பிள் அல்லது பருக்கள் வர ஆரம்பிக்கும்
அறிகுறி #5 நீங்கள் என்ன தான் உங்களது ரேசரை 2-3 முறை மட்டும் பயன்படுத்தி, மாதக்கணக்கில் வைத்திருந்து, அதில் அழுக்குகள் அல்லது லேசாக துருக்கள் இருந்தாலும், அந்த ரேசரை உடனே தூக்கி எறிந்துவிட வேண்டும்.