25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
​பொதுவானவை

உங்கள் தனித்தன்மையை காட்டும் அடையாளங்கள்

உங்கள் தனித்தன்மையை காட்டும் அடையாளங்கள்

ஆளுமை தரும் அடையாளம்! ஆளுமை… நாம் நம்மிடையே காண்பது சுயதோற்றம். பிறர் நம்மிடையே பார்ப்பதுதான் ஆளுமை. பெர்சனாலிட்டி (personality) என்ற ஆங்கிலச் சொல்லை அடிக்கடி இன்று கேட்கின்றோம். எந்தக் கருவியை எப்படி எப்படிக் கையாளுவது என்பதில் தான் ஆளுமை அடங்கியிருக்கின்றது.உங்களிடம் வெளிப்படும் சிந்தனை, செயல், எண்ணம், மொழி, மனம், ஒழுக்கம், சமூக உறவு போன்றவைதான் உங்களுடைய ஆளுமைப் பண்புகளையும் வெளிப்படுத்தும். பிறருக்கு உங்களை அடையாளப்படுத்தும்!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.

3. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.

4. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.

5. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப்படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

6. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.

7. நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

8 .உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

 

Related posts

இந்திய பெண்கள் திருமணத்தைக் கண்டு அஞ்ச காரணம்

nathan

நீர் தோசை

nathan

கொள்ளு சுண்டல் செய்வது எப்படி

nathan

சத்தான சுவையான உளுந்து கஞ்சி

nathan

உடலுக்கு வலிமை தரும் வரகு கஞ்சி

nathan

ஜவ்வரிசி சுண்டல்

nathan

உங்கள் காதல் உண்மையானதா?

nathan

ருசியான… வாழைக்காய் ஃப்ரை

nathan

கருவாடு ரசம் செய்திருக்கிறீர்களா?… இல்லைன்னா இதை படியுங்க…

nathan