26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
pimple scars 03 1486101567
முகப்பரு

ஒரே நாளில் முகத்தில் இருக்கும் பிம்பிள் மாயமாய் மறைய வேண்டுமா?

உங்கள் முகத்தில் பிம்பிள் அதிகமாக உள்ளதா? இதனால் உங்கள் முக அழகே பாழாகிறதா? முகத்தில் இருக்கும் அசிங்கமான பிம்பிளைப் போக்குவதற்கு முன், அது வருவதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரது சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருந்தாலோ அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலோ பருக்கள் வரும்.

பிம்பிளைப் போக்க கெமிக்கல் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு பருக்களைப் போக்க முயற்சித்தால், பருக்கள் விரைவில் போவதோடு, சரும செல்களின் ஆரோக்கியமும் மேம்படும். சரி, இப்போது ஒரே இரவில் முகத்தில் உள்ள பிம்பிளைப் போக்க உதவும் சில வழிகள்

ஐஸ் கட்டிகள் ஒரு துணியில் ஐஸ் கட்டியை வைத்து, பிம்பிள் மீது சிறிது நேரம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை ஐஸ் கட்டியைக் கொண்டு மசாஜ் செய்தால், சீக்கிரம் பிம்பிள் மறையும்.

தேன் பட்டை பொடியை தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது பிம்பிளின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவினால், பிம்பிள் இருந்த இடமே தெரியாமல் போகும்.

எலுமிச்சை சாறு ஒரு பௌலில் பட்டை பொடியை எடுத்துக் கொண்டு, அதை எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, இரவு நேரத்தில் பிம்பிளின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் கழுவ வேண்டும். இந்த முறை சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது அல்ல

டூத் பேஸ்ட் இரவில் படுக்கும் முன், டூத் பேஸ்ட்டை பிம்பிளின் மீது தடவி, மறுநாள் குளிர்ந்த நீரில் கழுவ, பிம்பிள் உதிர்ந்து மறைந்துவிடும்.

டீ-ட்ரீ ஆயில் டீ-ட்ரீ எண்ணெயை ஒரு காட்டனில் நனைத்து, பிம்பிள் மீது தடவி 15 நிமிடம் கழித்து கழுவலாம் அல்லது சிறிது கற்றாழை ஜெல்லுடன், 2 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, பிம்பிள் மீது தடவி 20 நிமிடம் கழித்து கழுவுவதன் மூலமும் பிம்பிள் மறையும். சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள், இந்த எண்ணெயைத் தவிர்ப்பது நல்லது.

பூண்டு ஒரு பூண்டு பல்லை இரண்டாக வெட்டி, அதை பிம்பிள் மீது தேய்த்து, 5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்தால், பிம்பிள் வேகமாக மறையும்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவை எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பிம்பிள் மீது தடவி, நன்கு உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால், பிம்பிள் சீக்கிரம் போய்விடும்.

பப்பாளி பப்பாளியை அரைத்து பேஸ்ட் செய்து, பிம்பிள் மீது தடவி 10-15 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், பிம்பிள் காணாமல் போகும்.

pimple scars 03 1486101567

Related posts

முகப்பருவை விரட்டும் எளிய மூலிகைகள்!

nathan

முகப்பருக்கள் வருவதை தடுக்கவும் , குனபடுதவும் சில எளிய ஆயுர்வேத வழிகள்.!

nathan

முகப்பருக்களை விரட்ட…!! வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.

nathan

முகப்பருவை கையால் கிள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள்

nathan

முட்டையின் வெள்ளைக் கருவைக் கொண்டு முகப்பருக்களைப் போக்குவது எப்படி?

nathan

பருக்கள் ஏன் வருகின்றது? வந்தால் என்ன செய்வது.

nathan

முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளதா? 15 நாட்களில் அதைப் போக்க சில டிப்ஸ்…!

nathan

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்!

nathan

முகப்பருக்களை அடியோடு ஒழிக்க

nathan