தேவையான பொருட்கள்:
கருவாடு – 4 துண்டுகள்
தனியா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
வெந்தயம் – 1/2 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 4
தக்காளி – 2 பெரியது
கொத்தமல்லி – 1 கைப்பிடி
கறிவேப்பிலை – 2 கீற்று
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
செய்முறை:
மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், தனியா, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் தக்காளி, கொத்தமல்லி, பூண்டு சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும். தண்ணீரில் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு போட்டு கலக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணய் ஊற்றி கருவாட்டை சற்று வறுத்து அந்த சட்டியிலேயே ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு மீதமுள்ள எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, கரைத்து வைத்த ரசத்தை ஊற்றவும். கொஞ்ச நேரம் கொதிக்கவிட்டு கொத்தமல்லியை தூவி இறக்கவும்.