கூந்தல் அடர்த்தியாக இருப்பதுதான் அழகு. அடர்த்தியான கூந்தல் பெற, பராமரிப்புடன் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் முடி உதிர்தலை கட்டுப்படுத்துவது.
ஏனென்றால் நீங்கள் என்னதான் அடர்த்தியாக எண்ணெய் மசாஜ் , ஹேர் மாஸ்க் செய்து கொண்டாலும், முடி உதிர்தல் தொடர்ந்து கொண்டிருந்தால் அடர்த்தி வராது. முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் அற்புத வழிகள் இங்கே சொல்லப்பட்டுள்ளது. படியுங்கள்.
ஐஸ் கட்டி : முடி உதிர்தல் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் இருந்தால் அந்த இடத்தில் தினமும் ஐஸ் கட்டி தடவுங்கள். இதனல் வேகமாக முடி வளரும். முடி உதிர்தலும் நிற்கும்.
கசகசா மற்றும் பாசிப்பருப்பு : கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அதனுடம் பயித்தமாவுடன் கலந்து தலையில் தேய்க்கவேண்டும். 15 நிமிடம் கழித்து குளியுங்கள். வாரம் ஒமுறை செய்தால் முடி உதிர்தல் நிற்கும்.
முடக்கத்தான் கீரை : வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து குளியுங்கள். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை : தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடாக்கி அதில் கற்றாழை ஜெல்லை போட்டு நன்றாக கலக்கி வையுங்கள். ஒரு நாள் ஊறிய பின் அந்த எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். இதனால் முடி உதிர்தல் நின்று கூந்தல் அடர்த்தியாக வளரும்
வெங்காயச் சாறு : வெங்காயச் சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து தலையில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கல். அருமையாக கூந்தலை வளரச் செய்யும். முடி அடர்த்தி பெறும்.