27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
pimple 28 1485583136
முகப்பரு

இந்த ஆரோக்கிய உணவுகள் பிம்பிளை உண்டாக்கும் எனத் தெரியுமா?

சிலருக்கு முகத்தில் பருக்கள் அல்லது பிம்பிள் அதிகமாக வரும். அதுவும் ஒருசில ஆரோக்கிய உணவுகளை உட்கொண்ட பின்பு, இன்னும் அதிகமாக வரும். ஆனால் நாம் சாப்பிடும் உணவுகளால் தான் அந்த பருக்கள் வருகிறது என்று நம்மில் பலருக்கும் தெரியாது.

இங்கு நாம் சாப்பிடும் எந்த உணவுகளால் பிம்பிள் வரும் என்பது பட்டியலிடப்பட்டுள்ளது. அதைத் தெரிந்து கொண்டு, உங்களுக்கு ஏற்கனவே பிம்பிள் இருந்தால், அந்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

கொழுப்பு நீக்கிய பால் கொழுப்பு நீக்கிய பாலைக் குடித்தால், பருக்கள் வராது என்று நினைக்காதீர்கள். இந்த பாலை தினமும் அளவுக்கு அதிகமாக ஒருவர் குடித்து வந்தால், அப்பாலில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் உட்பொருட்கள், பிம்பிளை உண்டாக்கும்.

கோதுமை பிரட் ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் டெர்மடாலஜி க்ளூட்டன் சகிப்புத்தன்மைக்கும், முகப்பருவிற்கும தொடர்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளது. ஆகவே க்ளூட்டன் சகிப்புத்தன்மை உங்களுக்கு இருந்தால், பிரட், செரில் பாஸ்தா போன்ற க்ளூட்டன் நிறைந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.

பழ ஸ்மூத்திகள் ஸ்மூத்திகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், பழங்களில் உள்ள ஃபுருக்டோஸ் முகப்பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஸ்மூத்திகளை அதிகம் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.

சோயாபீன் எண்ணெய் சோயாபீன் எண்ணெயில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் மற்றும் ஒமேகா-6 அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளது. ஆகவே இந்த எண்ணெயை முகப்பரு பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட்டால், நிலைமை இன்னும் மோசமாகும்.

கொழுப்பு குறைவான உணவுப் பொருட்கள் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் மட்டும் தான் முகப்பருக்களை உண்டாக்கும் என்பதில்லை. கொழுப்பு நீக்கப்பட்ட உணவுப் பொருட்களும் பிம்பிளை உண்டாக்கும். குறிப்பாக கொழுப்பு குறைவான தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது, அந்த சர்க்கரை கொலாஜன் இழைகளைப் பாதிப்பதோடு, பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிக்க முடியாமலும் செய்யும்.

pimple 28 1485583136

Related posts

முகப்பரு தழும்புகளை ஒரே நாளில் நீக்கும் வெந்தயம்!

nathan

இரண்டே வாரத்தில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க வேண்டுமா

nathan

தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா?

nathan

பருக்கள், தழும்புகளை போக்கும் ஹெர்பல் பேக்

nathan

முகப்பரு தழும்பு மாற!

nathan

பருக்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும் இதை முயன்று பாருங்கள்…..

sangika

முகப்பருவை கட்டுப்படுத்தும் வேம்பு

nathan

உடலில் பருவால் உண்டான தழும்பை போக்கும் வழிகள்

nathan

உங்கள் முகத்தில் உள்ள முகப்பரு வடுக்கள் மாற‌ 5 அற்புதமான‌ இயற்கை வைத்தியங்கள்

nathan