28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201706051525589350 nethili karuvadu mochai kulambu Dry Anchovy Fish Kuzhambu SECVPF
அசைவ வகைகள்

மொச்சை நெத்திலி கருவாட்டு குழம்பு

நெத்திலி கருவாட்டு குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். இந்த நெத்திலி கருவாடுடன் மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும்.

மொச்சை நெத்திலி கருவாட்டு குழம்பு
தேவையான பொருட்கள் :

மொச்சைப்பயறு – 100 கிராம்
நெத்திலி கருவாடு – 1/2 கிலோ
எண்ணெய் – 1 குழிக்கரண்டி
சிறிய வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
பூண்டு – 20 பல்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
புளி – எலுமிச்சம்பழ அளவு

தாளிக்க :

கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 5 (கிள்ளியது)

201706051525589350 nethili karuvadu mochai kulambu Dry Anchovy Fish Kuzhambu SECVPF

செய்முறை :

* மொச்சைப் பயறை வறுத்து ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

* நெத்திலி கருவாட்டை மண் போக சுத்தம் செய்து நன்றாக கழுவி கொள்ளவும்.

* புளியை கரைத்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பூண்டை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் புளிக்கரைசலை ஊற்றவும்.

* குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் மொச்சைப்பயிறு, நெத்திலி கருவாட்டை சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.

* இப்போது மொச்சை நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி.

Related posts

சுவையான சாஸ் வித் ஃபிஷ் செய்வது எப்படி

nathan

மட்டன் லிவர் மசாலா

nathan

மத்தி மீன் வறுவல்

nathan

காரைக்குடி மீன் குழம்பு

nathan

குளிர்காலத்தில் இவற்றை செய்கிறீர்களா?

sangika

ப்ரைடு சிக்கன்

nathan

சிக்கன் 65 செய்வது எப்படி

nathan

சத்து நிறைந்த மேத்தி ஆம்லெட்

nathan

சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி

nathan