29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
pHzovX8
முகப்பரு

முகப்பருவுக்கு காரணங்கள்

முகத்தின் அழகைக் கெடுத்து, தன்னம்பிக்கையைக் குலைக்கும் பிரச்னை முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல் 35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ் கட்டிகள், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும். முகப்பருக்கள் ஏற்பட, அடிப்படையான 6 காரணங்கள் உள்ளன.மரபணுமாற்றங்கள் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இளம் வயதில் அதிக முகப்பரு வந்திருந்தால், பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. சிலருக்கு, உடல் வெப்பம் அதிகம் இருக்கும். உடல் சூட்டின் காரணமாகவும் பருக்கள் ஏற்படும். மேலும், ஜீன் மாற்றத்தால் ஏற்படும் முகப்பருக்கள், ஒரு சிலரின் முகத்துக்குத் தனி அழகைத் தருவதும் உண்டு.பாக்டீரியா தொற்றுகாற்றிலும், தூசுக்களிலும் உள்ள பாக்டீரியாவால் முகப்பருக்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க, அடிக்கடி தண்ணீரால் முகம் கழுவலாம். பொடுகுப் பிரச்னை உள்ளவர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் தலையணை மூலமாகவும் பருக்கள் ஏற்படும். எனவே, படுக்கும்போது தலையணையின் மேல் டவல் விரித்துப் படுக்கலாம்.

ஹார்மோன் மாற்றம்

பருவ மாற்றம் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் சிலருக்கு முகப்பருக்கள் ஏற்படும். பூப்பெய்துதல், மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பெண்களுக்கு முகப்பருக்கள் ஏற்படும். முகப்பருக்கள் அதிகரிக்க முக்கியக் காரணம் டெஸ்டோஸ்டிரான் (Testosterone) ஹார்மோன்தான்.

அதிக தூக்கம்

நீண்ட நேரம் தூங்குவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். மேலும், அதிக வியர்வையினாலும் பருக்கள் வரலாம். தலைமுடி முகத்தில் படும்போது, அதைச் சரிசெய்வதால் ஏற்படும் கீறல்களினாலும் பருக்கள் வரும். தூங்கும்போது ஆண்ட்ரோஜன் ஹார்மோன்கள் (Androgen Hormone) முகத்தில் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கச் செய்கின்றன. அதிக எண்ணெய் சுரப்பின் காரணமாகவும் பருக்கள் வரலாம்.

அழகுசாதனங்களின் பயன்பாடு

அழகு சாதனங்களில் உள்ள வேதிப்பொருட் களினாலும் முகத்தில் பருக்கள், தேமல்கள் ஏற்படலாம். செயற்கை அழகு சாதனங்களைத் தவிர்த்து, இயற்கையாக அழகு பெற, தினமும் முகத்துக்கு பயத்தமாவு, மஞ்சள் கலந்து பூசலாம்.

சில உணவுகள்

சில உணவுகள் முகத்தில் பரு, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். பித்தம் அதிகமாவதாலும், ஐஸ்க்ரீம், சாக்லேட், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படும். பால், தயிர், முளைகட்டிய பயறு வகைகள், பொன்னாங்கண்ணிக் கீரையை உணவாக எடுத்துக்கொள்வது முகப்பருக்கள் வராமல் தடுக்கச் சிறந்த வழி.pHzovX8

Related posts

முகப்பருவை கையால் கிள்ளுவதால் சந்திக்கும் அபாயங்கள் குறித்து தெரியுமா?

nathan

பிம்பிளை போக்கும் இயற்கை வைத்தியம்

nathan

முகப்பரு தழும்புகளை நீக்க என்ன செய்யலாம் ?

nathan

பருக்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும் இதை முயன்று பாருங்கள்…..

sangika

முட்டையின் வெள்ளைக் கருவைக் கொண்டு முகப்பருக்களைப் போக்குவது எப்படி?

nathan

பூண்டு எப்படி முகப்பருக்களை போக்குகிறது என தெரியுமா?

nathan

முகப்பருக்களை வைத்து உள்ளுறுப்புகளின் பாதிப்பை அறியலாம்..!

nathan

முகப்பருக்கள் வருவதை தடுக்கவும் , குனபடுதவும் சில எளிய ஆயுர்வேத வழிகள்.!

nathan

முக பருவை போக்க..,

nathan