27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
201706021159219414 Orange dry skin. L styvpf
சரும பராமரிப்பு

வறண்ட சருமத்தை பாதுகாக்கும் ஆரஞ்சு

வறண்ட சருமத்தினர் தண்ணீர் அருந்துவது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

வறண்ட சருமத்தை பாதுகாக்கும் ஆரஞ்சு
இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.

இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது எண்ணெய் வடியும் முகத்தை கொண்டவர்களுக்கும் இந்த இரண்டும் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் நிறைந்த ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி மினு மினுப்படைவது உத்தரவாதமான ஒன்று என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்களும், டயட்டீசன்களும்.

பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்!

அதேப்போன்று அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு நீரை கலந்து, அதனுடன் ஓரிரு ஸ்பூன் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடம்பும் "சிக்"கென்று இருக்கும்.201706021159219414 Orange dry skin. L styvpf

Related posts

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டுமா?

nathan

பனிக்காலத்தில் சரும வறட்சியை போக்கும் வீட்டு வைத்தியம்

nathan

உங்களுக்கு தெரியுமா வசிகரிக்கும் அழகை பெற செய்ய வேண்டியவைகளும்! செய்ய கூடாதவைகளும்!

nathan

ஐஸ்கட்டிகளை கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்யலாம்.

nathan

இயற்கை அழகு குறிப்புக்கள்

nathan

மென்மையான சருமத்திற்கு உகந்த அழகு சாதனப் பொருட்கள்

nathan

இந்த இலையின் சாறை மட்டும் தடவினாலே தேமல் காணாமல் போகும் தெரியுமா?இதை முயன்று பாருங்கள்

nathan

சரும சுருக்கத்தை போக்கும் தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்

nathan

சருமத்துக்கு உணவு ஃபேஷியல்

nathan