வீட்டிற்கு விருந்தினர்கள் திடீரென வந்து விட்டால் அவர்களுக்கு இந்த சேமியா சர்க்கரை பொங்கலை செய்து கொடுத்து அசத்தலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தித்திப்பான சேமியா சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள் :
சேமியா – 1 கப்,
பாசிப்பருப்பு – அரை கப்,
வெல்லம் – ஒன்றரை கப்,
நெய் – அரை கப்,
முந்திரிப்பருப்பு – 20,
திராட்சை – 20,
ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்.
செய்முறை :
* பாசிப்பருப்பை மலர வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
* வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
* ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சேமியாவை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.
* ஒரு கடாயில் பாதியளவு நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்த பின் அதில் 2 கப் தண்ணீர் சேருங்கள். தண்ணீர் கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிடுங்கள்.
* ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டி வெந்த சேமியாவில் சேருங்கள்.
* அத்துடன் வேக வைத்த பாசிப்பருப்பையும் போட்டு, நன்கு சேர்ந்து வரும் வரை கிளறுங்கள்.
* கடைசியில் ஏலக்காய்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
* தித்திப்பான சேமியா சர்க்கரை பொங்கல் ரெடி.