26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
nail 13 1484298114
நகங்கள்

ஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்.

நகங்களை நன்கு வளரச் செய்ய வேண்டுமானால் நீங்கள் உங்களுடைய உடம்பில் உள்ள ‘கொலாஜன்’ என்ற புரோட்டின் சத்தினை அதிகரிக்க வேண்டும். சராசரியாக உங்கள் நகங்கள் ஒரு மாதத்தில் ஒரு இன்ச் அளவில் பத்தில் ஒரு பங்கு வளரும்.

ஆனால் அதன் வளர்ச்சி ஒவ்வொறு மனிதருக்கும் வேறுபடும். ஹார்மோன் குறைபாடு, சத்து குறைபாடு மற்றும் மருந்துகள் போன்றவற்றால் நக வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

நகங்களை பாதுகாக்க வேண்டுமானால் நல்ல உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தோலின் தன்மையை வைத்து நகங்களின் சிறப்பை அறியலாம். வீட்டிலேயே ஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வளரச் செய்யும் யுக்திகளை இங்கு காணலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

எலுமிச்சையுடன் கூடிய தேங்காய் எண்ணை: லெமன் சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் நகங்களின் சாயத்தன்மையை பாதுகாக்கும். தேங்காய் எண்ணையில் உள்ள ‘லாரிக் அமிலம்’ புறத்தோலின் தன்மையை உறுதியாக்கும் . ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணையுடன் 5 சொட்டு லெமன் சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். ‘மைக்ரோவேவ் ‘ அடுப்பில் 20 நொடிகள் அதனை கொதிக்க வைக்க வேண்டும். உங்கள் நகங்களை அதில் பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் நன்கு மசாஜ் செய்து விட வேண்டும். இதனை தினமும் ஒருமுறை பின்பற்ற வேண்டும்.

ஆரஞ்சு சாறு: ஆரஞ்சு சாற்றில் உள்ள ‘போலிக்’ அமிலமும் வைட்டமின் – சி வகையும் நகங்களின் வளர்ச்சிக்கு உதவும். உங்கள் நகங்களை 5 நிமிடத்திற்கு ஆரஞ்சு சாற்றில் நனைத்து பின்னர் கழுவி விடவும். பின்னர் நகங்களை உலர வைத்து விடவும்.

பூண்டு : பூண்டில் உள்ள சல்பர் சத்து நகங்கள் நொறுங்காமல் நன்கு வளர உதவுகிறது. ஒரு கப் தண்ணீரில் நன்கு மசித்த பூண்டும் ஒரு தேக்கரண்டி லெமன் சாறும் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அது நன்கு ஆறிய பின் அதனை ஒரு நகப்பூச்சு பாட்டிலில் ஊற்றி நகங்களில் தினமும் இரவு தூங்கும் முன் தேய்க்க வேண்டும்.

ஆலிவ் எண்ணைய் : ஆலிவ் எண்ணையில் உள்ள வைட்டமின் ஈ இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி நகங்களை நன்கு வளரச் செய்யும். இரவு தூங்கும் முன் உங்களுடைய நகங்களையும் புறத்தோல் பகுதிகளையும் சூடான ஆலிவ் எண்ணையைக் கொண்டு தேய்த்து கொள்ளவும். இதனை தினமும் கடைபிடிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணை மற்றும் தேன்: தேங்காய் எண்ணையில் உள்ள ‘லாரிக்" அமிலமும் தேனில் உள்ள ‘அமினோ" அமிலமும் நகங்களின் பளபளப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இந்த இரண்டு பொருட்களையும் கலந்து நகங்களின் மேல் 5 நிமிடம் தேய்க்க வேண்டும். சுமார் 15 நிமிடம் கழித்து அதனை கழுவி உலரச் செய்ய வேண்டும். இதனை வாரம் இருமுறை கடைபிடிக்க வேண்டும்.

குதிரைவால் மூலிகை: குதிரைவால் மூலிகையானது சத்து குறைவான நகங்களை நன்கு வளர உதவி செய்யும். ஒரு கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி குதிரை வால் மூலிகையை சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். அது ஆறிய பின் நகங்களை அந்த நீரில் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவி விட வேண்டும். இந்த முறையை வாரம் இருமுறை செய்ய வேண்டும்.

தக்காளி மற்றும் ஆலிவ் எண்ணைய்: தக்காளியில் உள்ள ‘பையோடின்" மற்றும் ‘வைட்டமின் – ஏ" நகங்களின் வளர்ச்சிக்கு உதவும். ஒரு தேக்கரண்டி தக்காளி சாற்றிணை அதே அளவு ஆலிவ் எண்ணையுடன் கலக்க வேண்டும். உங்கள் நகங்களை அதில் 10 நிமிடம் நனையச் செய்ய வேண்டும். ஒரு வாரத்தில், தேவையான நேரங்களில் இதனைச் செய்து பயன்பெற வேண்டும்.

ஆளிவிதை எண்ணைய்:
ஆளி விதையில் உள்ள ‘லெசிதின்" மற்றும் ‘ஒமேகா – 3 கொழுப்பு" சத்து நகங்களின் தன்மையைப் பாதுகாக்கும். ஆளிவிதை எண்ணையை நகங்களில் தேய்க்க வேண்டும். ஈரப் பதத்துடன் இருக்க கையுறைகளைப் பயன்படுத்தவும். இதனை ஒரு நாளுக்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

ஆரஞ்சு சாறு, பூண்டு மற்றும் ஆலிவ் எண்ணைய்: ஒரு தேக்கரண்டி ஆரஞ்சு சாறு, 3 சொட்டு பூண்டு சாறு மற்றும் 5 சொட்டு ஆலிவ் எண்ணையைக் கலந்து நகங்களில் தடவ வேண்டும். பின்னர் அதனை தண்ணீரில் கழுவி விடவேண்டும். இதனை தினமும் செய்ய வேண்டும்.

கிரீன் டீ: கிரீன் டீயில் உள்ள ‘ஏன்டி-ஆக்ஸிடன்ட்" நகங்களின் வளர்ச்சிக்கு உதவும். புதிய கிரீன் டீ தயாரித்து அதனை ஆற வைக்க வேண்டும். உங்களுடைய நகங்களை அதில் ஊறவைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவேண்டும். பின்னர் கைகளுக்கான க்ரீம் கொண்டு தேய்த்துக்கொள்ள வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்ய வேண்டும்.

கல் உப்பு: கல் உப்பில் உள்ள 20 மினரல்கள் நகங்களின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். கொதிக்க வைத்த நீரில் 1 தேக்கரண்டி கல் உப்பினையும் 3 சொட்டு ரோஸ்மேரி எண்ணையையும் கலந்து கொள்ளவும். உங்கள் நகங்களை அதில் 10 நிமிடம் ஊற வைத்துப் பின்னர் உலர்த்தி விடவும். இதனை வாரத்தில் 3 முறை செய்யவும்.

வைட்டமின் ஈ மற்றும் அத்யாவசிய எண்ணைய்: வைட்டமின் ஈ சத்து நகங்களுக்குப் புது உணர்ச்சியையும் அழகையும் கொடுக்கும். இரண்டு வைட்டமின்-ஈ கேப்சியூள்களை எடுத்து அதில் உள்ள களிம்பைப் பிதிக்கி எடுத்துக் கொள்ளவேண்டும். அதனுடன் இரண்டு சொட்டு லாவண்டர் அத்தியாவசிய எண்ணையைக் கலந்து கொள்ள வேண்டும். இதனை நகங்களுக்குப் பூசினால் காலையில் அவை பளபளப்பாகவும் உறுதியாகவும் தென்படும்.

nail 13 1484298114

Related posts

உங்க ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு சூப்பர் டிப்ஸ்….

nathan

நகங்கள் உடைந்து போகிறதா…

nathan

ஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை!…

sangika

நகங்களை அழகாக்கும் நெயில் ஸ்பா

nathan

இயற்கை முறையை பயன்படுத்தி நீளமான மற்றும் உறுதியான நகங்களை பெற முடியும்.

nathan

மஞ்சள் நிற நகங்களை சரி செய்யமுடியுமா?

nathan

உடையாத நீளமான நகம் பெற வேண்டுமா? இப்போ இந்த சாய்ஸ் ட்ரை பண்ணுங்க!!

nathan

கைவிரல்களுக்கு அழகு சேர்ப்ப‍து நகங்கள்தான். ….

sangika

நகம் கடிப்பதால் வரும் செப்சிஸ்!…

sangika