29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்

பொருத்தமான மேக்கப் (கூந்தல் உட்பட)

wedding hairstyles collage 1 thumb%5B1%5Dபெண்ணோ ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டும் சிறப்பு, கூந்தலுக்கு உண்டு. ஆனால் அதை பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை பலருக்கு. இதனால், நீண்டு அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக்கொள்ளும் பெண்கள் அதிகம்.

 

முடி சின்னதாக இருக்கே என்று கவவைப்படாமல் நம் முக அமைப்பு எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால், எந்த மாதிரி தலையலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கழுத்தின் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்தக் கூடிய விதவிதமான கொண்டை, பின்னல்களை போட்டுக் கொள்ளுங்கள்.

***

1. குட்டை முடி

*

உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கி வாரி கட்டிக் கொள்ளலாம். நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.

*

நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கமும் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும்.

*

அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும்படி வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.

*

அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர் கட் பண்ணலாம். நெற்றி முழுக்க முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.

*

குட்டைக் கழுத்து: குதிரை வால் கொண்டை பொருத்தம்.

*

தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நேராக்கி “சி” வடிவமாக வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவது போல் அமையுங்கள் அழகாக, வித்யாசமாக இருக்கும்.

***

2. நீளமான முடி

* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக பொருந்தும்.

* ப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால், முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.

* முடியை தூக்கி வாரி கொண்டையின் மேல் ப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டால் அழகுதான்.

*
நீளக் கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.

*
மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக இருக்கும். கழுத்தை ஒட்டி வரும்படியாக சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.

*
மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினார்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போன்ற கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.

*
உருண்டை முகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.

*
ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் இருந்து பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக் கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.

*
சதுரமுகம்: தளர (காதை மூடிய பின்னல்), கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்க விட்டால் மேலும் அழகாக இருக்கும்.

*
குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.

*
உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம். ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளுங்கள்.

*
குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.

*
எல்லோருமே கொண்டை வலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை (ஓவராக அல்ல) ஒட்டி வைத்துக் கொண்டால் விசேஷங்களுக்கு செல்லும்போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.

***

3. பொட்டு

* உடைக்கேற்ற டிசைன் பொட்டு அதே நிறத்தில் தேர்ந்தெடுங்கள். பொதுவாக மெரூன் பொட்டு எல்லா நிற உடைகளுக்கும் பொருந்தும்.

* உருண்டை முகம்: வட்டம், உயரம் என எல்லா பொட்டும் பொருந்தும். சிறிய, நீட்டப் பொட்டு சூப்பர்.

* குறுகிய நெற்றி: சிறிய டிசைன் பொட்டுக்கள் பொருந்தும்.

* நீள முகம்: கலர் சாந்தினால் அகல டிசைன் வரைந்து கொள்ளலாம்.

* சதுர முகம், பரந்த நெற்றி: நீள டிசைன் பொட்டுக்கள் வைக்கலாம்.

* ஜீன்ஸ் அணிந்தால்கூட பாம்பு போன்ற வளைந்த, நீள டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.

***

இயற்கை கலரிங்:

Tu 21

பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங்பண்ணுகிறவர்களுக்கும் “ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பலபிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு.

*

“கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும் அதற்கான சிகிச்சை இது…..

*

டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள்.

*

இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.

*

அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்:
தேங்காய்க் கீற்று – 2
வெள்ளைமிளகு – 1 டீஸ்பூன்

இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.

*

கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:-

இளம் மருதாணி இலை – 50 கிராம்
நெல்லிக்காய் – கால் கிலோ
வேப்பங்கொழுந்து – 2 கிராம்…

மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

*

இயற்கை கலரிங் முறை:-

சீயக்காயுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் கூந்தல் மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு ஹேர்டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.

***

பேஷன் டிப்ஸ்:

s2

1. கால் பகுதி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டை முழங்காலுக்கு மேல் வெட்டி அதை ஷார்ட்ஸாக மாற்றலாம்.

*

2. கிளாஸ் அணிவது வெறும் ஃபேஷன் என்று நினைத்து, கண்டதை அணிந்துவிட வேண்டாம். கண்ணுக்கே உலை வைத்துவிடக் கூடும்.

*

3. குர்த்தா பொதுவாக முழங்காலுக்கு மேல் 4 முதல் 4 அங்குலம் உயரம் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று நீட்டமானதாக்கி கொள்வது நல்லது.

*

4. ஆனால் உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று நீட்டமானதாக்கி கொள்வது நல்லது.

*

5. கூலிங் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது.

*

6. உடைகள் வாங்கும் போது கவனம். இறுக்கமான உடைகள் உங்களை குண்டாக காட்சியளிக்க வைக்கும். சரியாக பொருந்தும் உடைகளே சிறந்தவை.
மெல்லிய நெடுக்குக் கோடுகள் (Vertical Stripes) போட்ட உடைகள் உங்களுக்கு மெலிந்த தோற்றத்தை தரும்.

*

7. பழைய `டாப்ஸ்‘ அல்லது `சல்வார் கமீஸை‘ புதியதாக மாற்ற எளிய வழி. புதிய பட்டன், லேஸ் அல்லது எம்பிராய்டரி சேர்த்தால் புது உடை ரெடி!ஆக்ஸிடைஸ்ட் நகைகள் எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல் இவற்றை மார்டன் உடைகளோடும்; அதிக அளவிலும் அணியலாம்.

*

8. கோடை காலத்தில் எப்பொழுதும் ‘பேஸ்டல்‘ நிற உடைகளை அணியுங்கள்.

Related posts

வருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்!,tamil beautytips ,beauty tips tamil ,25 beauty tips tamil

nathan

உங்களுக்கு சிறந்த‌ 10 ஆரோக்கியமான முக பேஷியல் குறிப்புகள்

nathan

சூப்பர் டிப்ஸ்.. நகங்கள் உடைந்து போகிறதா… நக பராமரிப்புக்கான சில குறிப்புகள்

nathan

அழகு சிகிச்சைகள் – முக அழகிற்கு குங்குமப்பூ

nathan

வளர்ச்சியைத் தீர்மானிப்பது இதுதான்…..

sangika

ரொசாசியாவிற்கான 10 சிறந்த தோல் பராமரிப்பு குறிப்புகள்

nathan

கேரள அழகு ஆயுர்வேத சிகிச்சை முறை

nathan

முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இதயநோய் குணமாகவும், இதயம் வலுப்பெறவும் சில வழிமுறைகள்.

nathan