25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
10 1484042223 fenugreek
தலைமுடி சிகிச்சை

உங்கள் கூந்தல் அடர்த்தியாகனுமா? வாரம் ஒருமுறை இந்த சித்த மருத்துவ குறிப்புகளை யூஸ் பண்ணுங்க!!

கூந்தல் மிருதுவாக போஷாக்கோட இருந்தா தனி அழகை தரும். கூந்தல் அடர்த்தியாக வளர வாரம் ஒரு நாள் தலைக்கு மாஸ்க் போன்ற பேக்கை பயன்படுத்துங்கள். தினமும் நன்றாக படிய தலை சீவினால் ரத்த ஓட்டம் பாயும். அடர்த்தியாகவும் வளரும்.

அதை தவிர உங்கள் கூந்தல் அடர்த்தியாக வளர இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.

அடர்த்தியாக வளர:
வெந்தயம் மற்றும் குன்றி மணியை பொடி செய்து வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் போட்டு மூடி விடுங்கள்.
ஒரு வாரம் கழித்து அந்த எண்ணெயை உபயோகப்படுத்தத் தொடங்குங்கள். இந்த எண்ணெய் வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் முடி அடர்த்தியாக வளரும்.

முடி உதிர்தல் :
முடி உதிர்தலை தடுத்தாலே பாதி பிரச்சனை போகும். வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு மறு நாள் அந்த நீரினால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முடி உதிர்தல் நிற்கும்.

அதிமதுரம் :
அதிமதுரப் பொடியை நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். இதனுடன் கால் பாகம் பால் கலந்து தலைமுடியில் தடவி 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசினால் கூந்தல் நன்றாக வளரும்.

கருவேப்பிலை சீரகம் :
கருவேப்பிலை கைப்பிடி மற்றும் 2 ஸ்பூன் சீரகம் எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறியபின் வடிகட்டி அந்த எண்ணெயையை உபயோகித்து வந்தால் கூந்தல் கருகருவென அடர்த்தியாக வளரும்.

போஷாக்கு பெற:
பப்பாளியின் சதை பகுதியை மசித்து அதனுடன் யோகர்ட்டை கலந்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவினால் வறட்சி நீங்கி கூந்தல் மிருதுவாகும்.10 1484042223 fenugreek

Related posts

விசித்திரமா இருக்கே..!! தக்காளி முடி உதிர்வதைக் குறைக்குமா ?

nathan

உங்களுக்கு தெரியுமா தலையில் உள்ள எண்ணெய் பசையைப் போக்கும் தக்காளி…

nathan

உண்மையிலேயே மௌத் வாஷ் பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை அளிக்குமா?

nathan

நீங்கள் கூந்தல் அழகியாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்..

nathan

நரைமுடிக்கு இயற்கை வைத்தியத்தை தேடுபவரா நீங்கள்?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை தூண்டும் மசாஜ்

nathan

மோசமான கூந்தல் அமைப்பா? முடி உதிர்தலா? மயோனைஸ் ரெசிபி ட்ரைபண்ணுங்க!!

nathan

இளநரையை தவிர்க்க

nathan

முடி உதிர்தல், பொடுகு செய்ய வேண்டியவைகள்

nathan