11 1484115553 6 split ends
தலைமுடி சிகிச்சை

முடிகளில் வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டுமா? அப்ப வாரம் ஒருமுறை இத போடுங்க…

தலைமுடி ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தாலோ அல்லது முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் இருந்தாலோ, முடியின் முனைகளில் வெடிப்புக்கள் ஏற்படும். தற்போது சூரியக்கதிர்களின் தாக்கம் மிகவும் மோசமாக இருப்பதால், தலைமுடியில் உள்ள எண்ணெய் பசை முழுமையான உறிஞ்சப்பட்டுவிடுகிறது.

எனவே தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கவும், நல்ல சத்துக்கள் நிறைந்த இயற்கை பொருட்களைக் கொண்டு, வாரம் ஒரு முறை தவறாமல் ஹேர் மாஸ்க் போட வேண்டியது அவசியம்.

முடியின் முனைகளில் வெடிப்புக்கள் ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் மாஸ்க்கைப் போட்டு வந்தால், முடியின் முனைகள் வெடிப்பது தடுக்கப்படும்.

தேவையான பொருட்கள்:
விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன்
முட்டை – 1
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
கிளிசரின் – 1 டீஸ்பூன்

செய்முறை #1 முதலில் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2 பின் அத்துடன் இதர பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பின்பு தயாரித்து வைத்துள்ள ஹேர் மாஸ்க்கை ஸ்கால்ப் மற்றும் முடியின் முனை வரை நன்கு தடவ வேண்டும்.

செய்முறை #4 பிறகு ஷவர் கேப்பை தலையில் சுற்றி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, இறுதியில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

குறிப்பு இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 1-2 முறை தலைக்கு பயன்படுத்த வேண்டும். இந்த மாஸ்க்கை முடி வெடிப்பு முற்றிலும் போகும் வரை பின்பற்ற வேண்டும்.

11 1484115553 6 split ends

Related posts

அலுமினியத்தாளை தலையில் சுற்றிக் கொள்வதால் பெறும் நன்மை பற்றி தெரியுமா?

nathan

40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரிக்க

nathan

தலைமுடியில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? சில நேச்சுரல் ஹேர் பெர்ஃப்யூம்கள்!

nathan

பொடுகு, முடி உதிர்வு மற்றும் முடி பிளவை தடுக்கும் அற்புதமான எண்ணெய்

nathan

இளநரை போக்கும் கறிவேப்பிலை

nathan

உங்க இளநரையை நிரந்தரமாக கருமையாக்க வழிகள் என்ன தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

சித்த மருத்துவத்தில் கூந்தலை பராமாரிக்க எளிய வழிமுறைகள்

nathan

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

nathan

கூந்தல் : பொடுகைப் புரிந்து கொள்ளுங்கள்…

nathan