25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201705201532143349 muniyandi vilas chicken kulambu SECVPF
அசைவ வகைகள்

மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

இதுவரை எத்தனையோ ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து சுவைத்திருப்பீர்கள். இன்று மதுரை முனியாண்டி விலாஸ் ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
தேங்காய் பேஸ்ட் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு…

வரமிளகாய் – 6
மல்லி – 1 டீஸ்பூன்
பச்சரிசி – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை – 1 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 3

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
சோம்பு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2

செய்முறை :

* கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மஞ்சள் தூள் தூவி, சிக்கனின் நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட்டு, கொத்தமல்லியைத் தூவி மூடி வைத்து இறக்கினால், மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெடி!!!201705201532143349 muniyandi vilas chicken kulambu SECVPF

Related posts

சுவையான முட்டை மிளகு மசாலா

sangika

மொச்சை நெத்திலி மீன் குழம்பு

nathan

கோழி மிளகு வறுவல் செட்டிநாடு

nathan

சுவையான மீன் பிரியாணி செய்முறை விளக்கம்

nathan

ரமலான் ஸ்பெஷல்: பெப்பர் சிக்கன் வறுவல்

nathan

சூப்பரான முட்டை பணியார குருமா

nathan

வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு

nathan

மகாராஷ்டிரா ஸ்டைல் மல்வானி இறால் குழம்பு!!

nathan

காரைக்குடி முட்டை குழம்பு

nathan