25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
FdqLpvB
சிற்றுண்டி வகைகள்

பருப்பு போளி

என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு – 500 கிராம்,
சர்க்கரை – 850 கிராம்,
டால்டா – 300 கிராம்,
மைதா மாவு – 500 கிராம்,
ஜிலேபி ஃபுட் கலர் – 1/4 மேசைக்கரண்டி,
தேங்காய் எண்ணெய் – 1/4 கப்,
நெய் – 50 கிராம்,
டால்டா – 3 மேசைக்கரண்டி.

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை தண்ணீரில் சில மணி நேரம் ஊறவைத்து, வேகவைக்கவும். ஒன்று இரண்டாக வெந்த பிறகு, அதிகப்படியான தண்ணீரை ஈர்த்துவிட்டு அதனுடன் சர்க்கரையை சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் 300 கிராம் டால்டாவை சேர்த்து அதில் அரைத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்கு வறுக்கவும். பருப்புக் கலவை கடாயில் ஒட்டாமல் பந்து போல் வரும் போது அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் மூன்று மேசைக்கரண்டி டால்டா, மைதா மாவு, ஜிலேபி கலரை தண்ணீரில் கரைத்து.

அதையும் மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். கடைசியாக தேங்காய் எண்ணெய் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பருப்புக் கலவையை ஓர் எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டவும். அதில் பாதி அளவு மாவினை உருட்டி வைக்கவும். மாவை பூரி திரட்டுவது போல் திரட்டி, அதனுள் பருப்புக் கலவையை வைத்து, நன்கு மடித்து, மறுபடியும் மெதுவாக திரட்டி, தோசை கல்லில் நெய் சேர்த்து சுடவும். சூடாக சாப்பிடவும்.FdqLpvB

Related posts

ஸ்பிரிங் ரோல்ஸ் / Spring Rolls

nathan

கம்பு – கொள்ளு அடை செய்வது எப்படி

nathan

சுவையான மொறு மொறு சமோசா சாட்

nathan

வேர்க்கடலை போளி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ்: உப்பு சீடை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பொரி சாட் மசாலா

nathan

ஹராபாரா கபாப்

nathan

சுவையான தக்காளி தோசை சாப்பிட ஆசையா? கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்போமா?

nathan

ஹாட் அண்ட் சோர் ராகி கேக்ஸ்

nathan