குளிர்காலத்தில் சரும வறட்சி அதிகரிக்கும் எனவே தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் சரும வறட்சியைக் கட்டுப்படுத்தாலாம். மேலும் கால நிலை மாற்றத்தின்போது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு போக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். முகப்பரு மாறபுதினா இலைகளின் சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு மாறுவதுடன் முகம் பளபளக்கும்.இரவு படுக்கைக்குச் செல்லும்முன் சிவப்பு சந்தனக் கட்டையை நீரில் கரைத்து முகத்தில் பூசி காலையில் கழுவி வர முகப்பரு, பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள், தழும்புகள் மாறும்.இரவு படுக்கைக்குச் செல்லும்முன் புதினா சாறு எடுத்து அதில் சம அளவு எலுமிச்சம் பழச்சாறு கலந்து அதில் பயற்றம் மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கட்டி வைத்து ஒற்றடம் கொடுத்தால் முகம் பளபளக்கும்.