23.7 C
Chennai
Monday, Dec 23, 2024
EGrvHoe
கேக் செய்முறை

பிளாக் ஃபாரஸ்ட் கேக்

என்னென்ன தேவை?

மைதா – 150 கிராம்,
முட்டை- 6,
பொடித்த சர்க்கரை – 200 கிராம்,
கேரமல் – 3 டேபிள்ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 100 மி.லி.,
தேன் சிரப்-தேவைக்கு.

அலங்கரிக்க…

டார்க் சாக்லெட் துருவியது – 250 கிராம்,
செர்ரி – 50 கிராம்,
விப்பிங் கிரீம் – 300 மி.லி.,
பொடித்த சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

முட்டையின் வெள்ளைக் கரு, மஞ்சள் கருவை தனித்தனியாக பிரிக்கவும். பின் வெள்ளைக் கருவை எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். இத்துடன் சர்க்கரையை கலக்கவும். பிறகு மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு எண்ணெய் சேர்த்து கலக்கவும். இக்கலவையில் மைதா, பேக்கிங் பவுடரை சிறிது சிறிதாக சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு கட்டியில்லாமல் கலக்கவும்.
இத்துடன் கேரமல்லை ஊற்றி நன்கு கலந்து, வெண்ணெய் தடவிய குழியான கேக் டின்னில் ஊற்றி, 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில், 40-50 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியசில் பேக் பண்ணவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.

அலங்கரிக்க…

ஃப்ரிட்ஜில் இருந்து கேக்கை எடுத்து மூன்று லேயராக குறுக்குவாட்டில் வெட்டவும். பின் முதல் லேயர் கேக்கில் தேன் சிரப் ஊற்றி, சர்க்கரை, எசென்ஸ், அதன்மேல் 1 டீஸ்பூன் விப்பிங் கிரீமை தடவி, அதன் மீது சாக்லெட் துருவலை போடவும். பிறகு இரண்டாவது கேக்கை வைத்து முதலில் கூறியது போல் செய்யவும். பின் மூன்றாவது கேக்கை வைத்து, தேன் சிரப் ஊற்றி, விப்பிங் கிரீமை கேக் முழுவதும் தடவி, சுற்றிலும் சாக்லெட் துருவலை தூவி, கடைசியாக செர்ரியை கொண்டு அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து, பின்பு பரிமாறவும்.EGrvHoe

Related posts

வாழைப்பழ கேக்

nathan

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கோகோ கேக்

nathan

பேரிச்சம்பழ கேக்

nathan

மினி பான் கேக்

nathan

பான் கேக்

nathan

வெனிலா சுவிஸ் ரோல்

nathan

சைவக் கேக் – 2 (Vegetarian Cake)

nathan

சுவை மிகுந்த கோகோ கேக் செய்ய தயாரா….

nathan