28.5 C
Chennai
Saturday, Feb 1, 2025
04 1483513741 5 scrub3 10 1462869563
முகப் பராமரிப்பு

மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளைப் போக்க உதவும் ஓர் அற்புத வழி!

கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் மற்றும் அனைத்து வகையான சரும பிரச்சனைகள் வருவதற்கும் பல காரணங்கள் உள்ளன. அதில் மோசமான சரும பராமரிப்பு, அதிகப்படியான ஜங்க் உணவுகளை உட்கொள்வது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இப்படி ஏற்படும் சரும பிரச்சனைகளைத் தடுக்க ஃபேஸ் மாஸ்க்குகள், ஸ்கரப்கள், க்ரீம்கள் போன்றவற்றைக் கொண்டு அவ்வப்போது சருமத்தைப் பராமரிக்க வேண்டும். இக்கட்டுரையில் மூக்கின் மேல் இருக்கும் அசிங்கமான கரும்புள்ளிகளைப் போக்கும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
உப்பு – 1/4 டீஸ்பூன்
வெள்ளை க்ளே – 1/2 டீஸ்பூன்
தயிர் – 1/4 டீஸ்பூன்
ஒட்டும் பேப்பர்
டூத் பேஸ்ட்
டூத் பிரஷ்

செய்முறை #1
முதலில் டூத் பேஸ்ட்டில் உப்பு சேர்த்து, டூத் பிரஷ் பயன்படுத்தி, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மென்மையாக தேய்க்க வேண்டும்.

செய்முறை #2
பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

செய்முறை #3

பின்பு பேண்டேஜ் துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தின் மீது 5 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

செய்முறை #4
பிறகு அந்த இடத்தில் க்ளே பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து தடவி, 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகள் விரைவில் மறையும்.

குறிப்பு
இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், சருமம் மென்மையாகவும், கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகளின்றி அழகாக இருக்கும்.04 1483513741 5 scrub3 10 1462869563

Related posts

மூக்கின் மேல் வெண் புள்ளிகளா? தீர்க்க இத செய்யுங்க

nathan

சோர்வுடன் காணப்படும் முகத்தைப் பொலிவாக்க உதவும் பொருட்கள்!

nathan

முகம் வழுவழுப்பாக இருக்க!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… 35-வயதில் முகம் பளிச்சிட

nathan

சூப்பர் டிப்ஸ்! சருமத்திற்கு மென்மையும், புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர்………

nathan

எப்பவும் அழகா இருக்க

nathan

கண்ணுக்குக் கீழே கருவளையமா கவலை வேண்டாம்…..

nathan

அழகியை போல மின்ன வைக்கும் பாட்டியின் அந்த காலத்து அழகு குறிப்புகள்..! படிக்கத் தவறாதீர்கள்……

nathan

முகம் பளிச்சிட சில டிப்ஸ்

nathan