35.4 C
Chennai
Monday, Jun 24, 2024
201705121309456923 how to make mushroom manchurian SECVPF
சைவம்

குழந்தைகளுக்கான காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி

சைனீஸ் உணவுகளிலேயே மஞ்சூரியன் மிகவும் சுவையாக இருக்கும். இன்று காளான் மஞ்சூரியனை எப்படி எளிதில் சுவையான ருசியில் செய்வதென்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கான காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பட்டன் காளான் – 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
சோள மாவு – 4-5 டேபிள் ஸ்பூன்
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

201705121309456923 how to make mushroom manchurian SECVPF

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* காளானை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு துணியில் மேல் நீர் உறிஞ்சுமாறு வைக்க வேண்டும்.

* ஒரு பௌலில் சோள மாவு, மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* கழுவி வைத்துள்ள காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுப்பில் வேறு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.

* இப்போது சுவையான காளான மஞ்சூரியன் ரெடி!!!

Related posts

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு

nathan

சுவையான குடைமிளகாய் காளான் மிளகு வறுவல்

nathan

வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்

nathan

காராமணிப் பொரியல் செய்வது எப்படி

nathan

சுண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி

nathan

ஐந்து இலை குழம்பு அடடா, என்ன ருசி!

nathan

சேப்பங்கிழங்கு சாப்ஸ்

nathan

பருப்பு சாதம்

nathan

கொத்தவரங்காய் பொரியல்

nathan