28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
6LpQbOh
சைவம்

கொண்டக்கடலை தீயல்

என்னென்ன தேவை?

கொண்டக்கடலை -2 கப்
வெங்காயம் – 10
புளி கரைசல் – சிறிது
வெங்காய வடகம் – 5
சுண்டக்காய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தவரங்காய் – 15
நல்லெண்ணெய் – ¼ கப்
உப்பு – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

அரைக்க…

தேங்காய் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 7
மல்லி தூள் – 3 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

முதலில் கொண்டக்கடலையை இரவு முழுவதும் ஊறவைத்து பின் அவற்றை குக்கரில் எடுத்து சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய் சேர்த்து வறுக்கவும். பின்னர் தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி மல்லி தூள் சேர்த்து நன்றாக கலந்து, மிக்ஸி ஜாரில் போட்டு மசித்து வைக்கவும்.

இப்போது எண்ணெய்யில் வெங்காய வடகம், சுண்டக்காய், கொத்தவரங்காய், வெங்காயம் சேர்த்து வறுக்கவும். சமைத்த வைத்துள்ள கொண்டக்கடலை மற்றும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து பின் புளி கரைசல் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் கலந்து உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை போட்டு வறுத்து குழம்பில் ஊற்றி பரிமாறவும்.6LpQbOh

Related posts

சுவையான சேப்பங்கிழங்கு கிரேவி

nathan

எள்ளு சாதம்

nathan

கதம்ப சாதம்

nathan

சுவையான ட்ரை ஃபுரூட் புலாவ்

nathan

பப்பாளி கூட்டு

nathan

சுவையான உருளைக்கிழங்கு மோர் குழம்பு

nathan

ப்ராக்கோலி சால்ட் அண்ட் பெப்பர் ரெசிபி

nathan

சிம்பிளான… பன்னீர் குருமா

nathan

பக்கோடா குழம்பு

nathan