27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201705080908351799 banana stem chutney valaithandu chutney SECVPF
சட்னி வகைகள்

சத்து நிறைந்த வாழைத்தண்டு சட்னி

சத்து நிறைத்த வாழைத்தண்டை பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இந்த வாழைத்தண்டை வைத்து சத்தான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த வாழைத்தண்டு சட்னி
தேவையான பொருட்கள் :

நறுக்கிய வாழைத்தண்டு – கால் கப்
தேங்காய்த் துருவல் – 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 3 பல்
தோல் நீக்கிய இஞ்சி – ஒரு சிறு துண்டு
கடுகு, உளுந்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைத்தண்டை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கி ஆற விடவும்.

* மிக்சியில் வதக்கிய வாழைத்தண்டு, தேங்காய் துருவல், பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

* சத்து நிறைந்த வாழைத்தண்டு சட்னி ரெடி.201705080908351799 banana stem chutney valaithandu chutney SECVPF

Related posts

நார்த்தங்காய் பச்சடி

nathan

சத்தான சுவையான முட்டைகோஸ் சட்னி

nathan

புதுமையான முள்ளங்கி சட்னி!!

nathan

வறுத்து அரைத்த தேங்காய் சட்னி

nathan

தெரிஞ்சிக்கங்க…தக்காளி வெங்காயமே இல்லாமல் சுவையான சட்னி செய்வது எப்படி?

nathan

வெங்காய கொத்தமல்லி சட்னி

nathan

கோவைக்காய் சட்னி செய்முறை விளக்கம்

nathan

காசினி கீரை சட்னி

nathan

சுவையான பசலைக்கீரை ரெய்தா

nathan