கரும்புள்ளிகள் நம் முகத்தில் மூக்கு, தாடை, கன்னம் போன்ற பகுதிகளில் சொரசொரவென்று இருக்கும். முகப்பருக்களின் ஆரம்ப நிலை தான் கரும்புள்ளிகள். கரும்புள்ளிகள் தான் நாளடைவில் பருக்களாக உருவாகின்றன. இந்த கரும்புள்ளிகள் உடலில் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும் போது வரும்.
மேலும் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருந்தாலும், கரும்புள்ளிகள் வரும். அவ்வப்போது முகத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருந்தாலும், கரும்புள்ளிகள் வரும். இத்தகைய கரும்புள்ளிகளைப் போக்க சில பாட்டி வைத்தியங்கள் உள்ளது. அவற்றைப் பின்பற்றினால், கரும்புள்ளிகள் வேகமாக போய்விடும்.
வைத்தியம் #1
1 டீஸ்பூன் வேர்க்கடலை எண்ணெயுடன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ கரும்புள்ளிகள் உருவாவது தடுக்கப்படும்.
வைத்தியம் #2
வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலமும், கரும்புள்ளிகளைப் போக்கலாம்.
வைத்தியம் #3
தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருள். அந்த தேனை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
வைத்தியம் #4
முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, கரும்புள்ளிகளை முற்றிலும் போக்கலாம்.
வைத்தியம் #5
பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அதில் 3-4 துளிகள் தேனை சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் இருக்கும் மூக்கு, கன்னம், தாடை போன்ற பகுதிகளில் தடவி 5 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.