சிறுதானியங்களில் வரகரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த வரகரசியுடன் மிளகு சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
காரசாரமான வரகரசி – மிளகு மினி இட்லி
தேவையான பொருட்கள் :
வரகரிசி – 200 கிராம்,
பச்சரிசி – 50 கிராம்,
முழு உளுந்து – 100 கிராம்,
அவல் – ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
மிளகு – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
* மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* பச்சரிசியுடன் அவல் சேர்த்துக் களைந்து ஊறவைக்கவும்.
* வரகரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியே 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
* நன்றாக ஊறியதும் எல்லாவற்றையும் ஒன்றாக அரைத்து(நைசாக) உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
* மாவு புளித்துப் பொங்கியவுடன் அதில் கொரகொரப்பாக பொடித்த மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
* இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் மினி இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
* சூப்பரான வரகரசி – மிளகு மினி இட்லி ரெடி.