28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
19 1482121539 8 men moisturiser
முகப் பராமரிப்பு

ஆண்களே! உங்கள் முகத்தைக் கருப்பாக காட்டும் அழுக்கைப் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

தற்போது ஆண்கள் தங்கள் அழகின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். பெரும்பாலான ஆண்களின் முகம் கருப்பாக இருப்பதற்கு, அவ்வப்போது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றாமல் இருப்பது தான். இப்படி சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.

நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு அவ்வப்போது பராமரித்து வந்தாலே போதும். இங்கு சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் ஓர் அற்புத ஃபேஸ் பேக் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை குறைந்தது வாரம் ஒருமுறை ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் மேற்கொண்டு வந்தால், முகம் பிரகாசமாக இருக்கும்.

ஸ்டெப் #1 ஒரு கப் நீரை கொதிக்க வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ இலைகளைப் போட்டு, தீயை குறைத்து 5 நிமிடம் மீண்டும் கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

நன்கு கனிந்த தக்காளியை அரைத்து, பேஸ்ட் செய்து க்ரீன் டீயுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு அதில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவும் முன், சிறிது நேரம் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் சருமத் துளைகள் விரிவடையும்.

பிறகு தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

முகத்தில் தடவிய மாஸ்க் காய்ந்த பின், முகத்தில் சிறிது நீரைத் தெளித்து, கையால் மென்மையாக 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி விட்டு, குளிர்ந்த நீரால் இறுதியில் முகத்தைக் கழுவ வேண்டும்.

அடுத்து துணியால் முகத்தைத் துடைத்துவிட்டு, சரும வகைக்கு ஏற்ற மாய்ஸ்சுரைசரை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

19 1482121539 8 men moisturiser

Related posts

வாரத்துக்கு 2 முறை உப்தான் ஃபேஸ் பேக் போடுவதால் பெறும் நன்மைகள்

nathan

எண்ணெய் ஓவரா வழியுதா?அட்டகாசமான 6 ஐடியா

nathan

முகத்தில் உள்ள முடிகளை நீக்க

nathan

உங்களுக்கு வறண்ட சருமமா? அசத்தலான 7 டிப்ஸ்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நைட் தூங்கும் முன் இப்படி செஞ்சா சீக்கிரம் வெள்ளையாவீங்க…

nathan

கன்னம் அழகாக சில குறிப்புகள்

nathan

சருமத்தை பாதுகாக்க ஃபேஷியல் அவசியமா?

nathan

உங்கள் முகத்திற்கு எந்த வகையான புருவம் ஏற்றதாக இருக்கும்?

nathan

உங்களின் முகத்தில் கொலஸ்ரோல் படிந்து அசிங்கமாக உள்ளமாக உள்ளதா? அப்போ இத செய்யுங்கள்!…

sangika