25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
sl4808
சிற்றுண்டி வகைகள்

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 2 கப்,
உப்பு,
தண்ணீர் – தேவைக்கு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

பூரணத்திற்கு…

வேகவைத்த சாதம் – 1/4 கப்,
ஓமம் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்தூள் – 1/4 டீஸ்பூன்,
தனியாதூள் – 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்,
கரம்மசாலா – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லித்தழை – 2 டீஸ்பூன்,
எண்ணெய்/நெய் – பராத்தா செய்ய தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் வேகவைத்த சாதம், ஓமம், மிளகுத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், உப்பு, கரம்மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கவும். மாவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து உருட்டி குழிசெய்து பூரணத்தை வைத்து மூடி, சப்பாத்தியாக இட்டு சூடான கல்லில் எண்ணெய்/நெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். ஊறுகாய்,
தயிருடன் பரிமாறவும்.sl4808

Related posts

தால் கார சோமாஸி

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி

nathan

மைக்ரோவேவினுள் வைக்க எந்த மாதிரியான பாத்திரங்கள் சிறந்தவை?

nathan

நெய் ரோஸ்ட் | Ghee Roast

nathan

சூப்பரான சுறா புட்டு

nathan

மரவள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

nathan

சுவையான மங்களூர் போண்டா சாப்பிடனுமா? வீட்டிலேயே செய்யலாம்!

nathan

கீரை புலாவ்

nathan

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சோள ரவை கொழுக்கட்டை

nathan