suy
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான பசலைக்கீரை தோசை

தோசையில் பசலைக்கீரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இட்லி மாவு – 200 கிராம்
பசலைக்கீரை – அரை கட்டு
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1
தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* பசலைக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பசலைக் கீரை, சிறிது உப்பு(கீரைக்கு மட்டும்) சேர்த்து பாதியளவு வெந்ததும் இறக்கவும்.

* இவை அனைத்தையும் இட்லி மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி, சுற்றி சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

* சுவையான சத்தான பசலைக்கீரை தோசை ரெடி.suy

Related posts

சுவையான… இனிப்பு தட்டை

nathan

கேரளத்து ஆப்பம் செய்முறை

nathan

சத்தான சுவையான காராமணி பூர்ண கொழுக்கட்டை

nathan

சூப்பரான கோதுமை பாஸ்தா

nathan

காலிஃப்ளவர் பக்கோடா – cauliflower pakoda

nathan

தினை உப்புமா அடை

nathan

உருளைக்கிழங்கு ரோல்

nathan

கம்பு தயிர் வடை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா

nathan