28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201704291223048128 gold Fantastic necklaces in amazing design SECVPF
ஃபேஷன்

அற்புதமான வடிவமைப்பில் அருமையான நெக்லஸ்கள்

வெள்ளை மற்றும் வண்ணங்களில் ஜொலிக்கும் பட்டை தீட்டாத கற்கள் பதித்த நெக்லஸ்கள் இளவயது மங்கையர்கள் விரும்பி அணியும் நகையாக உள்ளது.

அற்புதமான வடிவமைப்பில் அருமையான நெக்லஸ்கள்
நெக்லஸ் எனப்படும் கழுத்தில் அணியும் அணிகலன்கள் முன்பு அகலமான பல வடிவமைப்பு மற்றும் கற்கள் பதித்தவாறு உருவாகி வந்தன. இன்றைய நாளில் நெக்லஸ்கள் மெல்லிய கச்சிதமான உருவ அமைப்பில், ஒவ்வொன்றும் தனிப்பட்ட டிசைன்கள் கொண்டவாறு உலா வருகின்றன. நெக்லஸ்கள் மெல்லிய தங்க டிசைன்கள் மற்றும் வைரம், ரூபி கற்கள் பதித்து வருகின்றன.

அத்துடன் வெட்டுகள் ஏற்படுத்தாத அன்-கட் வைரம், ரூபி, மரகதம் கற்கள் பதித்த நெக்லஸ்கள் கிடைக்கின்றன. அத்துடன் CZ கற்கள் பதித்த அழகிய நெக்லஸ்களும் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றுடன் தொடர்பு ஏற்படாத வித்தியாசமான நெளிவு அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

மெல்லிய வகை நெக்லஸ்கள் :

அகலமான நெக்லஸ்களை விட கூடுதல் அழகிய வடிவமைப்பு, வேலைப்பாடுகள், செதுக்கல்கள் கொண்டவாறு மெல்லிய நெக்லஸ்கள் வருகின்றன. மெல்லிய நெக்லஸ்கள் என்பது பூ இலை மற்று சிறு உருவ அமைப்புகள் வரிசையாக இணைக்கப்பட்டவாறு இரு பக்க வளைவு வசதிகளுடன் வரும். இதன் நடுப்பகுதி ஓர் பெரிய பதக்க அமைப்பு தொங்கலுடன் காணப்படும்.

கழுத்துடன் இணையும் பகுதி செயின் அமைப்பு அல்லது திரெட் அமைப்புடன் காணப்படுகிறது. தங்கத்தில் செய்யப்படும் மெல்லிய வடிவமைப்பு நெக்லஸ்கள் பேஷன் ஜூவல்லரி போன்று பிரமாத அமைப்புடன் உள்ளன. மெல்லிய நெக்லஸ்கள் எடை குறைவானது. அணிய சுலபமானது விலை குறைவு. மேலும் தினசரி பணிகளுடன் அனைத்து விழாக்களுக்கு அணிய ஏற்ற நகையாக உள்ளது.

அன்-கட் டைமண்ட் நெக்லஸ்கள் :

பட்டை தீடப்படாத அன்-கட் டைமண்ட் சிறு கற்கள் அதிக எண்ணிக்கையில் பதியப்பட்டவாறு மெல்லிய நெக்லஸ்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்கென பிரத்யேக செட்டிங் அமைப்புடன் கற்கள் பதியப்படுவதால், கற்கள் ஏதும் கொட்டவும் செய்யாது. ஜொலிக்கும் பட்டை தீட்டாத வைர கற்கள், ரூபி, எமரால்டு கற்கள் வர்ண ஜாலம் புரியும் வகையில் டிசைன்களுக்கு ஏற்ப கலந்து பதியப்பட்டு தரப்படுகின்றன.

மெல்லிய இணைப்பு செயின் அமைப்பின் நடுவே பெரிய பதக்க மைப்பும் பட்டை தீட்டப்படாத கற்களால் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் வண்ணங்களில் ஜொலிக்கும் பட்டை தீட்டாத கற்கள் பதித்த நெக்லஸ்கள் இளவயது மங்கையர்கள் விரும்பி அணியும் நகையாக உள்ளது. இதனை அணியும் பெண்கள் தேவதை போன்று தோற்றமளிப்பது உறுதி.

தங்கத்திலேயே டிசைன் செய்யப்பட்ட மெல்லிய நெக்லஸ்கள் :

மெல்லிய கனமான அல்லது தகடு அமைப்பில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மெல்லிய நெக்லஸ்கள் தங்க நிறத்தில் ஜொலிக்கின்றன. ஒரே மாதிரியான டிசைன்கள் வரிசைப்படுத்தப்பட்டு இருபுறமும் ஜொலிக்க நடுப்பகுதியில் அழகிய பதக்க அமைப்பு முழுக்க சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவாறு உள்ளன. பதக்க அமைப்பின் கீழ் பகுயில் சிறு மணி உருளைகள், இலைகள் தொங்க விடப்பட்டுள்ளன.

நெக்லஸின் மேற்புற டிசைன்கள் இரட்டை நிற சாயல் கொண்டவாறும் உருவாக்கப்படுகிறது. மெல்லிய நெக்லஸ்களின் செயின் அமைப்பில் சிறிய டிசைன்கள் மட்டுமின்றி சற்று பெரிய வடிவமைப்பு இணைப்புகள் கொண்ட நெக்லஸும் கிடைக்கின்றன.

CZ கற்கள் பதித்த மெல்லிய நெக்லஸ்கள் :

ஜிர்கான் கற்கள் என்பவை விலை குறைந்த ஜொலிக்கும் வெள்ளை கற்கள். பார்க்க வைரம் மாதிரியே தோன்றும். இந்த கற்கள் பதித்த வெள்ளை தங்க மெல்லிய நெக்லஸ்கள் அற்புதமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இவை இக்கற்கள் பதியவதற்கு ஏற்ப வளைவுகள், குழல் வடிவம், மெல்லிய கம்பி அமைப்பு கொண்ட நெக்லஸ்களாக உருவாக்கப்படுகின்றன. 201704291223048128 gold Fantastic necklaces in amazing design SECVPF

Related posts

மெஹந்தி என்ற பெயரில் வடமொழி சொல்லில் அழைக்கப்படும் மருதாணி

nathan

kanchipuram saree silk – காஞ்சிபுரம் புடவை

nathan

பெண்களே தங்க நகைகளை பராமரிப்பது எப்படி?

sangika

ஆடை பராமரிப்பு… `ஆல் இன் ஆல்…ஒரு டஜன் யோசனைகள்!

nathan

மொடலிங் துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு…! : சூப்பர் ஐடியாஸ்….

nathan

ஜீன்ஸிற்கு ஏற்ற பொருத்தமான டாப்சை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

ஆடைக்கேற்ற அழகான காலணிகள்

nathan

ஃபேஷன் டிசைனிங் துறையில் எதிர்காலம் இருக்கிறதா?

nathan

பெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா? ஆபத்தானதா?

nathan