24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201704280932257825 Bridal long heavy. L styvpf
மணப்பெண் சிகை அலங்காரம்

கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்

பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது.

கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்
தங்கத்தில் செய்யப்படும் பெரும்பாலான நகைகள் பெண்களுக்கு உரியதாகவே உருவாக்கப்படுகின்றன. பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது.

பெண்களின் உடல் பாகங்களுக்கு ஈடாய் தலையலங்கார நகைகள் நிறைய உருவாக்கப்பட்டுள்ளன. பழங்காலம் தொட்டு பெண்களின் தலையலங்கார நகைகள் கூடுதல் வனப்புடன், அதிக மெருகுடன் உருவாக்கப்ட்டு வருகின்றன. இவற்றினை பெண்கள் தினம் தலையலங்காரத்தில் எனவும், விசேஷங்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போதும் தலையலங்காரத்திற்கு என பயன்படுத்தி வந்தனர்.
201704280932257825 Bridal long heavy. L styvpf
நாளடைவில் தலையலங்காரத்திற்கு என பிற வகை உலோக மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வந்ததும், தங்க தலையலங்கார சாமான்கள் அதிக பாதுகாப்புக்கு உகந்ததாக இருந்தாலும் தினசரி மற்றும் பண்டிகை பயன்பாடுகள் குறைய தொடங்கின. ஆயினும் தலையலங்கார நகைகள் பாரம்பரியாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பிரத்யேகமாக பாதுகாத்து வைத்திருந்தனர். இன்றைய நாளில் தலையலங்கார தங்க நகைகள் மீண்டும் இளவயது பெண்களின் மனதில் ஓர் தனி இடம் பிடித்துள்ளன. இதன் காரணமாக நவீனமும், பழமையும் கலந்த வடிவமைப்பில் அழகிய தலையலங்கார நகைகள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

201704280932257825 Bridal long heavy gold jada SECVPF

விதவிதமான தலையலங்கார நகைகள் :

தலையலங்காரத்திற்கு என நெற்றிச்சுட்டி, ஜடை வில்லை, சூர்ய பிரபை, சந்திர பிரபை, ஜடை, தற்கால கிளிப் மற்றும் ஹேர்பின்கள், கொண்டை ஊசி, குஞ்சரம் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் 22 காரட் தங்கத்தில் கற்கள், மணிகள் பதித்தவாறு உருவாக்கப்பட்டு தரப்படுகின்றன. அத்துடன் இந்த தலையலங்கார நகைகள் 18 காரட் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டும் கிடைக்கின்றன.

ஆயினும் என்றும் பெண்கள் விரும்பும் தங்கத்தில் உலா வரும் தலையலங்கார பொருட்கள்தான் மதிப்பும், வரவேற்பும் பெறுகின்றன. தலையலங்கார நகைகள் முன்பு மணப்பெண் மற்றும் விழாவிற்கு உரிய பெண்கள் அணிவதாக இருந்தது. இன்று மணப்பெண் தோழியின் உறவு பெண்கள் என அனைத்து பெண்களும் அணிந்து அசத்துகின்றனர்.

தங்க ஜடையும் குஞ்சரமும் :

தலைமுடியில் பின்னப்பட்ட ஜடையின் மேற்புறம் தங்கத்தில் செய்யப்பட்ட ஜடை அமைப்பு அலங்காரத்திற்கு என அணியப்படுகிறது. மேல் முதல் கீழ் வரிசை சிரமாக பறவைகள், பதக்கங்கள், மலர்கள், தகடு வேலைப்பாடு கொண்ட ஜடை அமைப்பு அணியப்படும். இது நூல்கள் கொண்டு முடி ஜடையின் கட்டும் அமைப்பில் இருக்கும். மெல்லிய தகடு, மணி, பதக்க அமைப்பினை ஜடைகள் எடை குறைந்தவாறு கிடைப்பதால் விலை அதிகம் என பயப்பட வேண்டும். மேலும் ஜடையில் தொங்கும் குஞ்சரங்கள் எனாமல் பூசப்பட்டு வண்ண குஞ்ரங்களாக தொங்குகின்றன.

நவீன தலை சொருகு நகைகள் :

தலையின் உச்சி மற்றும் ஓரப்பகுதிகளில் சொருகுகின்ற கிளிப் மற்றும் கல் பதித்த ஹேர்பின்கள் தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. விதவிதமான பூக்கள், கிளிகள், மயில் உருவ அமைப்பின் தங்க கிளிப்கள் பெண்களின் தலையில் ஒய்யாரமாய் நடனமிடுகின்றன. அத்துடன் ஹேர்பின்கள் சற்று அகலமானதாக கற்கள் நீள் வரிசையாக பதியப்பட்டு கிடைக்கின்றன. பழங்கால சூர்ய பிரபை, சந்திர பிரபையும் சில மாறுபட்ட வடிவில் உள்ளன.

Related posts

சாட்டின் ரிப்பனில் தலையலங்காரப் பொருட்கள்

nathan

hair style wedding : உங்கள் பிக் டேக்கான அழகான சிகை அலங்காரங்கள்

nathan

‘ஃப்ளோட்’ ஹேர்ஸ்டைல்..

nathan

Messy Buns: பிஸியான பெண்களுக்கான அல்டிமேட் ஹேர் ஹேக்

nathan

ஸ்டைலான தோற்றத்திற்கு : சிறந்த பின்னல் சிகை அலங்காரங்கள் | braiding hairstyle

nathan