21.6 C
Chennai
Saturday, Dec 13, 2025
knee 13 1481610384
கால்கள் பராமரிப்பு

சொரசொரவென கருப்பான முட்டியை மாற்றும் ஒரு எளிய வழி!! வாரம் ஒருமுறை செஞ்சு பாருங்க!!

நமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா? அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை.

அதனால்தான் முட்டியில் இறந்த செல்கள் அழுக்குகள் தேங்கி சொரசொரப்பாகவும் கருப்பாகவும் மாற்றுகின்றன.

அவ்வாறான கருப்படைந்த முட்டிகளை சாதரண நிறத்திற்கு கொண்டுவருவது எளிதல்ல. ஆனால் வாரம் ஒருமுறை இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயனபடுத்திப் பாருங்கள்.

தேவையானவை : சமையல் சோடா – 1 ஸ்பூன் தேன் – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – அரை மூடி ஆலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன்.

செய்முறை : முதலில் சமையல் சோடாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இது முட்டியிலுள்ள சொரசொரப்பை போக்க உதவும்.

சமையல் சோடவும் தேனை கலந்து நன்றாக கலக்குங்கள். இது முட்டிக்கு ஊட்டம் அளிக்கும். மிருதுத்தன்மை தரும்.

அவற்றுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக பேஸ்ட் போல் ஆனவுடன் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து கலக்குங்கள்.

பின்னர் முட்டியில் இந்த கலவையை தேய்த்து அரை மணி நேரம் ஊற விடவும். அதன் பின் கழுவுங்கள்.

இதன் பின்னர் கற்றாழையின் ஜெல்லை முட்டியில் தடவி காயவிடவும். இவ்வாறு செய்தால் முட்டியின் நிறம் விரைவில் மாறி பளிச்சிடும். வாரம் ஒருமுறை ஒரு விடுமுறை நாளில் செய்து பாருங்கள். பலன் தரும்.

knee 13 1481610384 1

Related posts

அழகான பாதத்திற்கு

nathan

tips for soft feet-மென்மையான கால்களுக்கு

nathan

மெத்தென்ற பாதம் கிடைக்க எளிமையான டிப்ஸ் !!

nathan

எளிய முறையில் பாதம் பராமரிப்பு

nathan

அழகை கெடுக்கும் பாத வெடிப்பை தீர்க்கும் இயற்கை வழிமுறை

nathan

முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்கள்!…

sangika

சிலருக்கு பித்தவெடிப்பு ஏற்படக்காரணம் என்ன?

nathan

பாதங்களைப் பாதுகாக்க!

nathan

பாதங் கள் பாதுகாக்க‍ப்படுவதால் உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்!….

sangika