25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
சைவம்

உடல் ஆரோக்கியத்திற்கு செய்திடுங்கள் இஞ்சி குழம்பு…!

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 3
புளி – சிறிதளவு
பூண்டு – 20 பல்
இஞ்சி – 25 கிராம்
வெந்தயம் – 1 ஸ்பூன் (வறுத்து பொடித்தது)
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளி – சிறிதளவு


செய்முறை:

ஒரு வாணலில் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை வதக்கி மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பின்னர் 1 டம்ளர் தண்ணீர், புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவும். நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். இஞ்சி குழம்பு தயார். இந்த இஞ்சி குழம்பு வயிற்று அஜீரணம் மற்றும் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.1479192187 6435

Related posts

கலவை காய்கறி அவியல் செய்வது எப்படி?

nathan

மஷ்ரூம் தொக்கு

nathan

நூல்கோல் குழம்பு

nathan

ராஜ்மா பிரியாணி செய்வது எப்படி

nathan

சேப்பங்கிழங்கு சாப்ஸ்

nathan

சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

nathan

தக்காளி புளியோதரை

nathan

சத்தான முள்ளங்கி கீரை பொரியல்

nathan

முருங்கைக்காய் மிளகு குழம்பு

nathan