25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
n46MEz7
கேக் செய்முறை

மேங்கோ கிரீம் சீஸ் புட்டிங்

என்னென்ன தேவை?

மாம்பழம் நறுக்கியது – 4 கப் (பங்கனப்பள்ளி அல்லது சதை நிறைந்த மாம்பழம்),
கேக் – 1/2 கிலோ,
கிரீம் – 1/4 கிலோ,
குளிர்ந்த பால் – 1 கப்,
பொடித்த சர்க்கரை – 1 கப்,
மாம்பழ எசென்ஸ் அல்லது வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்.

கேக் செய்ய…

கன்டன்ஸ்டு மில்க் – 1 டின்,
மைதா – 1/4 கிலோ,
சர்க்கரை – 60 கிராம்,
வெண்ணெய் -100 கிராம்,
மாம்பழ எசென்ஸ் அல்லது வெனிலா எசென்ஸ் -2 டீஸ்பூன் (மேற்கண்ட எல்லாவற்றையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும்).
மைதா – 1/4 கிலோ,
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்,
சோடா உப்பு – 1 டீஸ்பூன்,
பால் – 2 கப்.

இவையெல்லாவற்றையும் சேர்த்து சலித்து அடித்து வைத்துள்ள கலவையுடன் கலந்து 2 கப் சூடான பால் ஊற்றிக் கலந்து (விழுது பதம் வர வேண்டும்) பின் கேக் செய்யும் பாத்திரத்தில் ஊற்றி 180 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் பேக் செய்யவும்.

எப்படிச் செய்வது?

குளிர்ந்த பாலில் சிறிதளவு கிரீம் சேர்த்துக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரை கலந்து கெட்டியாக அடித்துக் கொள்ளவும். பின் எசென்ஸ் சேர்க்கவும். கேக்கை ஸ்லைஸ்களாக வெட்டவும். மாம்பழ தோலைச் சீவி, சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டவும். ஒரு 2 இஞ்ச் கண்ணாடி புட்டிங் பாத்திரம் அல்லது ஃபேன்ஸி டிரேயிலும் செட் செய்யலாம். முதலில் கேக் ஸ்லைஸில் ஒன்றைக் கீழே பரத்தி அதன் மேல் சிறிது பால் தெளிக்கவும்.

இப்போது கிரீமை மேலே தடவி, (சுமார் 1/4 இஞ்ச் உயரம் இருக்கலாம்). நறுக்கிய மாம்பழத் துண்டுகளை மேலே தூவவும். இவ்வாறு ஒவ்வொரு தடவையும், கேக் அதன் மேல் கிரீம் அதன் மேல் பழத் துண்டுகள் என்று அடுக்கி, மேலே நான்கு புறமும் கிரீம் தடவி, பழத்துண்டுகளால் அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து ஸ்லைஸ்களாக வெட்டி ஜில்லென்று பரிமாறவும். கோடை காலத்திற்கு ஏற்ற சூப்பர் புட்டிங் இது.n46MEz7

Related posts

முட்டை பப்ஸ் – Egg Puffs

nathan

சைவக் கேக் – 2 (Vegetarian Cake)

nathan

நாவூறச் செய்யும் நாவல்பழ கேக்

nathan

கூடை கேக்

nathan

காபி  கேக்

nathan

பனீர் கேக்

nathan

கிறிஸ்துமஸ் பிளம் கேக்

nathan

ருசியான சாக்லேட் கேக் தயார்…

sangika

ஆல்மண்ட் மோக்கா

nathan