பேச்சிலர்கள் செய்ய மிகவும் எளிமையானது இந்த தேங்காய் பால் சாதம். எளிய முறையில் இந்த தேங்காய் பால் சாதத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி – 1 கப்
பெரிய வெங்காயம் – 3
வெள்ளை பூண்டு – 20 பல்
பச்சை மிளகாய் – 7
புதினா – 1 கட்டு
கொத்தமல்லி – சிறிதளவு
நெய் – தேவைகேற்ப
தேங்காய் எண்ணெய் – தேவைகேற்ப
உப்பு – தேவைகேற்ப
தேங்காய் பால் – 1 3/4 பங்கு
தாளிக்க :
பட்டை,
லவங்கம்,
கிராம்பு,
ஏலக்காய்,
அன்னாசி பூ,
கல் பாசி
செய்முறை :
* புதினா, கொத்தமல்லி, பூண்டு, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
* ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவு ஊற்றி, தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
* கழுவி 10 நிமிடம் ஊற வைத்த அரிசியை நீர் வடித்த பின், அதனுடன் சேர்த்து வதக்கவும்..
* பின் மேலே குறிப்பிட்ட அளவு தேங்காய் பாலை ஊற்றி கிளறவும்.
* குக்கரை மூடி 2 விசில் போட்டு இறக்கவும். விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து சிறிதளவு நெய் ஊற்றி கிளறி பரிமாறவும்.
* சூடான சுவையான தேங்காய் பால் சாதம் ரெடி.
* இதற்கு சிக்கன் கிரேவி நல்லதொரு சைட்டிஷ்.