27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
201704251529154404 finger chicken. L styvpf
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் ஃபிங்கர் சிக்கன்

மாலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த ஃபிங்கர் சிக்கனை செய்து கொடுக்கலாம். புலாவ், சாம்பார் சாதத்திற்கு ஃபிங்கர் சிக்கன் சூப்பரான சைடிஷ் ஆகும்.

மாலை நேர ஸ்நாக்ஸ் ஃபிங்கர் சிக்கன்
தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
முட்டை – 1
தயிர் – 1 கப்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மைதா – 1 கப்
பிரட் தூள் – 1 கப்
உப்பு – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
கேசரி கலர் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

201704251529154404 finger chicken. L styvpf

செய்முறை :

* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து 1 இஞ்ச் நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

* பின்னர் அதில் தயிர், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.

* அடுத்து அதில் சிக்கனை அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.

* ஒரு கிண்ணத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பவுடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

* ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள தயிர் கலவையை முற்றிலும் வடித்து விடவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

* பிறகு வடிகட்டிய அந்த சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* பின் பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும்.

* வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைபழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம்.

* இப்போது சுவையான ஃபிங்கர் சிக்கன் ரெடி!!!

* இந்த ஃபிங்கர் சிக்கனை சாஸோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

Related posts

பீட்ரூட் ராகி தோசை செய்முறை விளக்கம்

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு ஆப்பம்

nathan

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோசை

nathan

வெஜிடபிள் உருண்டை

nathan

சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

கேழ்வரகு இனிப்பு தோசை

nathan

மாலை நேர டிபன் இடியாப்ப பிரியாணி

nathan

ஈஸியான ரவா பொங்கல் செய்ய…

nathan

தேங்காய் ரொட்டி

nathan