சாமந்தி பூவின் இதழகளை அரைத்து பிறந்த குழந்தைக்கு பூசி குளிக்க வைக்கும் பழக்கம் இன்றக்கும் சில கிராமங்களில் வழக்கம் உள்ளது.பூவின் நிறத்திலேயே சரும நிறம் மாறும் என்பது கண்கூடான உண்மை.
அதுபோல் பல இயற்கை மூலிகைகள் நமது சருமத்திற்கு மாயாஜாலத்தை தருகிறது என்றால் அது மிகையாகாது. அவ்வாறானா பொருட்களை இங்கு காண்போம்.
சாமந்தி பூ ஃபேஸ் பேக் : புதிதான சாமந்திப் பூ இதழ்கள் – கைப்பிடி பால் – சிறிது தேன் – 1 ஸ்பூன்
சாமந்தி இதழ்களை அரைத்து அதனுடன் 1 ஸ்பூன் அளவு பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.
தேவையானவை : சந்தனம் – 1 ஸ்பூன் ரோஸ் எண்ணெய் – 2 துளி லாவெண்டர் எண்ணெய் – 2 துளி கடலைமாவு – 1 ஸ்பூன் மோர் – சிறிது
அரோமா ஃபேஸ் மாஸ்க் : மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து கலக்கும் அளவிற்கு மோர் விட்டு குழைத்துக் கொள்ளுங்கள். வாரம் 3 நாட்கள் இரவு படுப்பதற்கு முன் இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சுருக்கம், கருமை, பரு எல்லாம் மறைந்து முகம் பளபளக்கும்.
ஹெர்பல் ஸ்க்ரப் : கோதுமை தவிடு சந்தனம் துளசி
கோதுமையை சலித்து அந்த தவிட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்த சந்தனம், துளசி சாறு கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடம் காய விட்டு கழுவினால், முகம் மின்னும்.
சந்தன பேக் : சந்தனக் கல்லில் ரோஸ் வாட்டர் வொட்டு சந்தனத்தை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் இதனுடன் சிறிது பால் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் பொலிவு தெரியும்.