டயட்டில் இருப்போர் அதிகம் பயன்படுத்தும் ஒரு உணவுப் பொருள் தான் ஓட்ஸ். இதை மாலையில் ஸ்நாக்ஸ் போன்று செய்து சாப்பிட மட்டுமின்றி, காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளக்கூடியவாறு இருக்கும்.
சத்து நிறைந்த ஓட்ஸ் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் – 1 1/4 கப்
தண்ணீர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 2
செய்முறை :
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஓட்ஸை போட்டு வாசனை வரும் வரை 3 நிமிடம் வரை வறுத்து இறக்கி ஆற விடவும்.
* அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
* நீரானது நன்கு கொதித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து 3 நிமிடம் நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, இந்த மாவை கொழுக்கட்டை போன்று பிடித்து, இட்லி தட்டில் வைத்து, பின் இந்த தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து 8 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
* சத்து நிறைந்த ஓட்ஸ் கொழுக்கட்டை ரெடி!!!