22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
201704191043532764 ragi semiya veg biryani SECVPF
சைவம்

சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணி

த்தான கேழ்வரகை வைத்து வித்தியாசமான சத்தான உணவுகளை செய்யலாம். இன்று கேழ்வரகு சேமியாவை வைத்து சூப்பரான பிரியாணி செய்து எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணி
தேவையான பொருட்கள் :

ராகி சேமியா – ஒரு கப்,
பச்சைப் பட்டாணி – 50 கிராம்,
பீன்ஸ் – 10
கேரட் – 1
தக்காளி – ஒன்று
பெரிய வெங்காயம் – ஒன்று
கொத்தமல்லித்தழை, புதினாத்தழை – சிறிதளவு
பட்டை – சிறிய துண்டு,
சோம்பு – அரை டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை – ஒன்று,
பிரியாணி மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 6 பல்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
ஏலக்காய் – 2,
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* வெங்காயம், கேரட், பீன்ஸ், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சேமியாவை வெறும் கடாயில் போட்டு சிறிது வதக்கி கொள்ளவும்.

* வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

* காய்கறிகள் சற்று வதங்கியதும் இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத்தூள், உப்பு சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவும் (இதனால் சேமியா உதிர் உதிராக வேகும்).

* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான ராகி சேமியா பிரியாணி ரெடி.201704191043532764 ragi semiya veg biryani SECVPF

Related posts

சிம்பிளான… பன்னீர் குருமா

nathan

சூப்பரான உருளைக்கிழங்கு – பிரட் பிரியாணி

nathan

மாங்காய் சாம்பார்

nathan

சுவையான சேப்பங்கிழங்கு கிரேவி

nathan

காராமணி மசாலா கிரேவி

nathan

மெட்ராஸ் சாம்பார்| madras sambar

nathan

காலிபிளவர் மிளகு வறுவல்

nathan

தர்பூசணிக் கூட்டு

nathan

சைடிஷ் சேனைக்கிழங்கு மசாலா வறுவல்

nathan