குளிர்காலத்தில் ஏராளமான தலைமுடி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே தலைமுடி பிரச்சனைகளை சந்திப்பதற்கு முன், அதற்கு முறையான பாதுகாப்புக்களை வழங்கினால், தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
அதற்கு தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, வாரந்தோறும் தலைக்கு ஆயில் மசாஜ் செய்வது போன்றவை மட்டும் போதாது, டயட்டில் ஒருசில மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும். இங்கு குளிர்காலத்தில் ஏற்படும் தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்க உதவும் உணவுகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தலைமுடி வறட்சி
குளிர்காலத்தில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், ஆளி விதைகள், பாதாம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால், அது முடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், தலைமுடி வறட்சியடைவதைத் தடுக்கும்
முடி வெடிப்பு
முடியின் முனைகளில் வெடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்க, ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இத்தகைய ஜிங்க் இறைச்சி, முட்டை, முழு தானியங்கள் மற்றும் நட்ஸ் போன்றவற்றில் உள்ளது. மேலும் இந்த உணவுப் பொருட்களில் வைட்டமின்களான பி6, பி12 மற்றும் சி போன்றவையும் உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் தலைமுடி வெடிப்பை தடுப்பதோடு, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும்.
சுருட்டை முடி
உங்களுக்கு சுருட்டை முடியா? முடி பஞ்சுமிட்டாய் போன்று உள்ளதா? இதைத் தடுக்க அவகேடோ மற்றும் தயிர் கொண்டு ஹேர் பேக் போடுவதுடன், அவற்றை உணவில் சேர்த்தும் கொள்ள வேண்டும்.
எண்ணெய் பசை முடி
வைட்டமின் பி நிறைந்த உணவுகள் தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்துவதுடன், தலையில் சீரான அளவில் எண்ணெய் பசை இருக்கச் செய்யும். அதற்கு வைட்டமின் பி நிறைந்த உணவுகளான சிக்கன், மீன், மட்டன், பீன்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.