greyhair 03 1480746542
தலைமுடி சிகிச்சை

இளநரையை மறையச் செய்யும் ஒரு மூலிகை எண்ணெய் !!

உடல் சூட்டினால் கூட இள நரை உண்டாகலாம். சத்து குறைபாடு, அதிக மன அழுத்தம், உபயோகிக்கும் ஷாம்பூக்கலும் இள நரைக்கு காரணம்.

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. இவ்வாறு செய்தால் இள நரையை தவிரக்க முடியும்.

உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இள நரையை போக்கும் கீரை : முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும்.

தேவையானவை : தேங்காய் எண்ணெய் – 100 மி.லி. சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு – 1/2 ஸ்பூன் சின்ன வெங்காயம் – 3 கறிவேப்பிலை – கைப்பிடி அளவு கொத்தமல்லலி – சிறிதளவு நெல்லி வற்றல் – 10 கிராம் வெட்டிவேர் – 5 கிராம்

செய்முறை : எண்ணெயை சூடுபடுத்தி அதில் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு காய்ச்சி எடுங்கள். ஆறியபின் வடிகட்டி அந்த எண்ணெயை வாரம் இருமுறை தேய்த்து குளித்தால் இள நரை மறையும்.

நன்மை : அதோடு இவை உடலுக்கு குளிர்ச்சியும் நரம்புகளுக்கு ஊட்டமும் அளிக்கும். கூந்தலுதிர்தலையும் கட்டுப்படுத்தும். உபயோகித்துப் பாருங்கள்.

greyhair 03 1480746542

Related posts

ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்க காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள்!!

nathan

முல்தானி மட்டியில் இத கலந்து யூஸ் பண்ணினா முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை வரவே வராது தெரியுமா!!

nathan

பெண்களே என்ன பண்ணினாலும் பொடுகு போகலையா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க பத்து டிப்ஸ் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இளமையிலேயே தலைமுடி நரைக்க முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா…?

nathan

வழுக்கைத் தலையாவதைத் தடுப்பது எப்படி?

nathan

பொடுகை போக்கும் ஆப்பிள் சீடர் வினிகர் – எளிய நிவாரணம்

nathan

தலை அரிப்பை போக்கும் ஆப்பிள் சிடர் வினிகர்

nathan

தீவிரமான பொடுகு தொல்லையா? வெங்காயச் சாறை உபயோகப்படுத்தும் வழிகள்!!

nathan