உலகில் உள்ள ஒவ்வொருவரும் தலைமுடி உதிர்வதால் தினந்தோறும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தலைமுடி உதிர்வதற்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் மயிர்கால்கள் பலவீனமாக இருப்பது முதன்மையான காரணம். தலைமுடிக்கு போதிய ஊட்டச்சத்துக்களை எண்ணெய்கள் வழங்கும். ஆனால் நம்மில் எத்தனை பேர் தினமும் தலைக்கு எண்ணெய் தடவுகிறோம் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
தலைக்கு தினமும் நல்ல சத்துக்கள் நிறைந்த எண்ணெயைப் பயன்படுத்தினாலே, தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம். இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் ஓர் அற்புத எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைத் தயாரித்துப் பயன்படுத்தி வாருங்கள்.
தேவையான பொருட்கள்: செம்பருத்திப் பூ மற்றும் இலைகள் தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய்
செய்முறை #1 முதலில் செம்பருத்திப் பூ மற்றும் இலைகளை எடுத்துக் கொண்டு, அரைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை #2 பின் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை சரிசம அளவில் எடுத்து, ஒரு பாட்டிலில் ஒன்றாக ஊற்றிக் கொள்ள வேண்டும்.
செய்முறை #3 பின்பு அரைத்து வைத்துள்ள செம்பருத்தி பூ மற்றும் இலைகளை எண்ணெயுடன் சேர்த்து, இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை #4 மறுநாள் காலையில் சிறிது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு அல்லது சீகைக்காய் பயன்படுத்தி நீரில் அலச வேண்டும்.
நன்மை இந்த எண்ணெய் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும். இந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.