உப்தன் என்பது வட சொல்லாகும். வட இந்தியாவில் சரும நிறத்தை அதிகரிக்க பாரம்பரியமான அழகுப் பொருட்கள் கலந்த கலவையை சருமத்திற்கு உபயோகப்படுத்துவார்கள். அந்த கலவைக்கு பெயர் உப்தன் என்று பெயர்.
இந்த உப்தன் கலவை உபயோகத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடும். அவ்வாறான உங்கள் சருமத்திற்கு நிறத்தை கூட்டும் உப்தன் மற்றும் அதனை பயன்படுத்தும் முறையையும் பார்க்கலாம்.
தேவையானவை :
சந்தனப் பொடி – 1 ஸ்பூன்
கடலை மாவு – 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்
பால் – 1 ஸ்பூன்
செய்முறை :
இவை அனைத்தையும் பேஸ்ட் போலச் செய்து கொள்ளுங்கள். முகத்தை ஈரப்படுத்தி, இந்த கலவையை முகத்தில் மேல் நோக்கி தேய்த்து கழுவுங்கள். தினமும் காலை மாலை செய்தால் 3 நாட்களுக்குள் முகம் நிறமாவதை உணர்வீர்கள்.
உப்தன் ஸ்க்ரப் :
தேவையானவை :
கடலைமாவு – 3 ஸ்பூன்
வேப்பிலை பொடி – 1 ஸ்பூன்
சந்தனப் பொடி- 1 ஸ்பூன்
வெள்ளரி பேஸ்ட் – 1ஸ்பூன்
மஞ்சள் – அரை ஸ்பூன்
செய்முறை :
மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து முகத்தில் வட்ட வடிவில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவை சுருக்கம், கருமை ஆகிய்வற்றை மறையச் செய்து முகத்தை தங்க நிறமாக்கும்.
அருமையான ஃபேஸ் பேக் தினசரி உபயோகத்திற்கு :
தேவையானவை :
கடலை மாவு – 2 ஸ்பூன்
கோதுமை மாவு – 1 ஸ்பூன்
மஞ்சள் – ஒரு சிட்டிகை
சந்தனப் பொடி – 1 ஸ்பூன்
மாதுளை சாறு – 1 ஸ்பூன்
செய்முறை :
இவற்றை எல்லாம் சேர்த்து அவற்றுடன் சிறிது பன்னீர் அல்லது பாலை கலந்து முகத்தில் போடுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவவும். இவ்வாறு தினமும் இரவு அல்லது நேரம் இருக்கும்போது செய்தால் முகம் ஜொலிக்கும். நிறத்தை அதிகரிக்கும்