பெண்கள் தங்கள் முக அழகுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும்.
நகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்.
தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எந்தவித பாதிப்பும் வராது.
சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு சிரமமாக இருக்கும். எனவே விரல்களை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் வெட்டலாம்.
நகங்கள் அடிக்கடி உடைந்து போனால், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை ஊறவைத்து பின்னர் கழுவினால் நகங்கள் உறுதியாகும்.
நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதைவிட நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்தி வந்தால் மிகவும் நல்லது.
தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்பட்டால் நெயில் பாலிஷ் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால் நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரத்தன்மையின்றி இருக்கும்போது ஷேப் செய்ய வேண்டும்.
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.
மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.