29.8 C
Chennai
Thursday, Nov 14, 2024
1477978584 4096
சாரி பிளவுஸ் வடிவங்கள்

வித்தியாசமான முட்டை சப்பாத்தி செய்ய…

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்து என்று பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 2
முட்டை – 3
கடலை மாவு – 4 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வதக்கிய வெங்காயம், கடலைமாவு, மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து அத்துடன் முட்டை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி, ஒரு சப்பாத்தியை எடுத்து கல்லில் போட்டு, கலந்து வைத்துள்ள முட்டை கலவையைத் சப்பாத்தியில் முழுவதும் படும்மாறு ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போடவும்.திருப்பி போட்டு அந்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுத்தால் முட்டை சப்பாத்தி ரெடி. சுவையான முட்டை சப்பாத்தி ரெடி.

குறிப்பு: சப்பாத்தி மீதி இருந்தால் இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.1477978584 4096

Related posts

A Look at the Stylish Blouse Back Side | ஸ்டைலிஷ் பிளவுஸ் பின்புறம் ஒரு பார்வை

nathan

அளவான பிளவ்ஸின் அளவை வைத்து பிளவ்சுக்கு துணி வெட்டும் முறை இங்கே தரப்பட்டுள்ளது.

nathan

அளவெடுத்து வெட்டும் முறை Blouse

nathan