முகப்பரு பிரச்சனையால் ஏராளமான மக்கள் கஷ்டப்படுகின்றனர். முகத்தில் பருக்கள் அதிகம் வர ஆரம்பித்தால், அது ஒருவரது அழகை கெடுத்து, பல நேரங்களில் தன்னம்பிக்கையையே இழக்கச் செய்யும். அதுமட்டுமின்றி, பருக்கள் போகும் போது அது தழும்புகளை உண்டாக்கும். இந்த தழும்புகள் இன்னும் முகத்தை அசிங்கமாக வெளிக்காட்டும்.
இதற்கு பல கடைகளில் விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைக்காது. ஆனாம் நம் பாட்டி வைத்தியங்கள் இதற்கு நல்ல தீர்வைத் தரும். இங்கு முகத்தில் உள்ள முகப்பரு தழும்புகளை மறைக்க உதவும் சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வைத்தியம் #1
சந்தனப் பொடியை பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் பருக்கள் போய்விடும்.
வைத்தியம் #2
முகத்தில் பருக்களின் தழும்புகள் அதிகம் இருந்தால், எலுமிச்சை ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் தினமும் 3 வேளை என 15 நாட்கள் பருக, தழும்புகள் விரைவில் மறையும்.
வைத்தியம் #3
இரவில் படுக்கும் முன் 3 பாதாமை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலுரித்து, அதை அரைத்து சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, முகப்பரு தழும்புகள் நீங்கும்.
வைத்தியம் #4
உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் மற்றும் சல்பர், முகத்தில் உள்ள தழும்புகளை போக்கும். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்துக் கழுவ வேண்டும்.
வைத்தியம் #5
கடலை மாவில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள முகப்பரு தழும்புகள் மறையும்.