25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

மென்மையான கூந்தலுக்கு…

beauty-tips-08-12-1415 முழு உளுத்தம் பருப்பை புளித்த தயிரில் இரவே ஊறவையுங்கள். காலையில் அரைத்து. அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் சீயக்காய்த்தூளைக் கலந்து கொள்ளுங்கள்.

வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை தலைக்குத் தேய்த்து அலசுங்கள். தலைமுடி கண்டிஷனாக இருப்பதுடன் சோர்வு நீங்கி. கண்கள் “பளிச்” சென்று பிரகாசிக்கும். சிலருக்கு கூந்தல் செம்பட்டை நிறத்தில் இருக்கும். கருகருவென்று இல்லையே என்று கவலைப்படுவார்கள். அவர்களுக்கான எளிய வைத்தியம் இது. உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன். கறிவேப்பிலை – 10. இவற்றைப் புளித்த மோரில் ஊற வைத்து அரையுங்கள்.

இந்த பேஸ்ட்டை தலையில் “பேக்” ஆகப் போட்டு 10 நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வர. கூந்தல் கருகருவென்றாகும். நீளக் கூந்தல் பிரியையா நீங்கள்? உங்களுக்கே உங்களுக்கான அசத்தல் சிகிச்சை இது. இதற்கு உளுத்துகூடத் தேவையில்லை…. இட்லி, தோசைக்கு ஊற வைத்த உளுத்த பருப்பின் தண்ணீரே போதுமானது!

கொட்டை நீக்கிய நெல்லிக்காய் – 2 செம்பருத்தி இலை – 5. இந்த இரண்டையும் அரைத்து இதனுடன் வெந்தய பவுடர் – 1 டீஸ்பூன் சேர்த்து உளுத்தம் பருப்பு ஊற வைத்த தண்ணீரையும் கலந்த கொள்ளுங்கள்.

இதை தலையில் “பேக்” ஆகப் போட்டு உலர்ந்ததும் அலசுங்கள் வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்துவர தலை முடியின் வேர்ப் பகுதிகளில் வளர்ச்சி தூண்டப்பட்டு கூந்தல் நீளமாக வளரத் தொடங்கும்.

உ.பருப்பு கழுவிய தண்ணீரே நுரைத்து. ஷாம்பு மாதிரி அழுக்கை நீக்குவதால் தனியே ஷாம்பு போட வேண்டிய அவசியமில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.

Related posts

கலரிங் செய்த முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!

nathan

இயற்கை முறையில் சீயக்காய் தூள் வீட்டில் செய்வது எப்படி. தெரிந்துகொள்வோமா?

nathan

நீளமாக கூந்தல் வளர…

nathan

கூந்தல் சந்தேகங்கள்…

nathan

படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?

nathan

கொய்யா இலை முடி உதிர்வை கட்டுப்படுத்தி நன்றாக வளர உதவும் …!

nathan

பொடுகை நீக்கி, மேனியை பலபலக்கவைக்கும் ஆலிவ் ஆயில்!

nathan

முடி ரொம்ப வறண்டு இருக்குதா?அப்ப இத யூஸ் பண்ணுங்க…

nathan

இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்…அதுவும் இயற்கையான முறையில்..முடி சரசரனு வேகமா வளர..

nathan