29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ld461242
சரும பராமரிப்பு

வெயில் காலத்தில் செய்ய வேண்டியவை

அழகுக் கலை நிபுணர் மேனகா ராம்குமார் வழங்கும் டிப்ஸ்…

எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கு
எண்ணெய் அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் மேக்கப் செய்பவர்கள் ஐஸ் கட்டியை பயன்படுத்துவது சிறந்ததாகும். வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய ஃபேஸ் வாஷ் நீம் ஃபேஸ் வாஷாக இருப்பது நல்லது. முகப்பரு இருக்கக்கூடியவர்கள் ஃபேஸ் மசாஜ் செய்யவே கூடாது. கிரீம் பேஸ்டு அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது.ஜெல் பேஸ்டு பயன்படுத்தலாம். ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

சுத்தமான ஆலுவேரா, 2 டேபிள் ஸ்பூன் சுத்தமான தயிர். அரைக்கப்பட்ட ஸ்டாபெரி-்க்கள் 3, கால் கப் போராக்ஸ் அனைத்தையும் கலந்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் மிருதுவான வெந்நீரில் கழுவ வேண்டும். எண்ணெய் வடியும் சருமம் இருப்பவர்கள் எப்போதுமே இளமையாக இருப்பார்கள். இது அவர்களின் தனித்துவமாக இருக்கிறது.

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு
தினமும் மாய்ஸ்டிரைசர் பயன்படுத்த வேண்டும், தூங்கப் போகும்போது நைட் கிரீம் பயன்படுத்த வேண்டும். ஃபேஸ் ஜெல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கிரீம் பேஸ்டு ஃபவுண்டேஷன் பயன்படுத்துவது நல்லது. வைட்டமின் ஏ, பி, சி ஊட்டச்சத்து உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முகச்சுருக்கங்களை ஏ மற்றும் பி வைட்டமின்கள் கட்டுப்படுத்தும். வைட்டமின் சி வெயிலால் சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும். வைட்டமின் சி வருண்ட சருமத்திற்கு சிறந்தது. கருவளையங்களைப் போக்குவதற்கு வைட்டமின் கே சிறந்தது. அவகடோ மாய்ஸ்டிரைசர்ஸ் வறண்ட சருமத்திற்கு சிறந்தது. அவற்றை கண் மற்றும் மூக்கு பகுதியில் பயன்படுத்தக்கூடாது. 15 நிமிடம் வைத்து சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காயை எல்லாவித சருமத்திற்கும் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து முகத்தில் தடவி 15லிருந்து 20 நிமிடம் காய வைத்து கழுவ வேண்டும். அரை கப் ஆர்கானிக் ஆப்பிள் ஜூஸை காட்டன் துணியால் நனைத்து முகத்தில் தடவி விடவேண்டும். இது எல்லாவித சருமத்திற்கும் பயன்படுத்தலாம்.

கரு வளையங்களை போக்குவதற்கு
4 டேபிள்ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் ஐஸ் வாட்டர் கலந்து காட்டன் துணியால் நனைத்து கண்களை மூடி புருவத்தின் மேல் பகுதியிலும் கண்களை சுற்றிலும் வைக்க வேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். அரை கப் பால், ஒரு தேக்கரண்டி தேன், அரை கப் ஓட்ஸ் எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் சாதாரணமாக மசாஜ் செய்ய வேண்டும். இது வெயில் காலங்களில் எல்லா வித சருமத்திற்கும் சிறந்தது
ld461242

Related posts

உங்களுக்கு தெரியுமா தேனைக் கொண்டு சருமத்தை எப்படியெல்லாம் பராமரிக்கலாம்?

nathan

மகத்துவமான மருதாணி:

nathan

கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் இருக்க செய்ய!…

nathan

பால் போன்ற நிறம் கொண்ட சருமம் வேண்டுமா?

nathan

அழகுக் கட்டுரைகள் – அழகு உள்ளப் பயிற்சி & உடற்பயிற்சி & அழகு ஒப்பனை முறைகள்

nathan

உடல் அழகை பாதுகாப்பதில் தக்காளியின் பங்கு!!!

nathan

உடல் நாற்றத்தை போக்க எளிய வீட்டு வைத்தியம்

nathan

அழகை பேணி காப்பதில் கடலை மா பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.

nathan

சரும நிறத்தை அதிகரிக்கும் புளி

nathan