24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
சைவம்

கத்திரிக்காய் பிரியாணி,

 

344_L_clmvpf.gifஎப்போதுமே சமையலுக்கு பிஞ்சு கத்திரிக் காய்கள் தான் சிறந்தவை. முற்றிய கத்திரிக்காயை அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கு வரும். கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும். அதனால் தான் பத்திய வைத்தியத்தில் இந்தக் காய் முக்கிய இடம் வகிக்கிறது. அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். கத்திரிக்காய் என்றால் சாம்பார், பொரியல், புளிக்குழம்பு என்று ஒரே மாதிரி செய்யாமல் ஒரு மாறுதலுக்கு கத்திரிக்காய் பிரியாணி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும், அனைவருக்கும் பிடிக்கும், கத்திரிக்காயை வேண்டாம் என்று சொன்னவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள், நான் நிறைய தடவை செய்து உள்ளேன். மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து சுவைத்து பாருங்கள்!

தேவையானப் பொருட்கள்

  • அரிசி – 2 கப்
  • கத்திரிக்காய் – கால் கிலோ
  • பெரிய வெங்காயம் – 4
  • தக்காளி – கால் கிலோ
  • பச்சை மிளகாய் – 5
  • தயிர் – 2 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • தேங்காய்பால் – 1/2 கப்
  • சோம்பு – 1/2 ஸ்பூன்
  • பட்டை – 1
  • கிராம்பு – 1
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
  • மல்லித்தூள் – 3 ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 50 கிராம்
  • முந்திரி – 10 கிராம்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • நெய் – 50 கிராம்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து அத்தனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி அதனுடன் கத்திரிக்காய் (நீளவாக்கில் நறுக்கவும்) போட்டு நன்கு வதக்கவும்.

கத்திரிக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் தயிர், தேங்காய்பால் ஊற்றி வதக்கி அரிசியையும் போட்டு நன்கு கிளறவும்.

4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும்,நெய் ஊற்றி கொத்தமல்லி தூவி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து முந்திரி, கடலைப்பருப்பு (வறுக்கவும்) போட்டு சாதம் உடையாமல் கிளறி பரிமாறலாம்.

Related posts

சூப்பரான மொச்சை கத்திரிக்காய் குழம்பு

nathan

உருளைக்கிழங்கு ரெய்தா

nathan

அரிசி ரவை கீரை கொழுக்கட்டை

nathan

சூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணி

nathan

கொண்டை கடலை குழம்பு

nathan

முள்ளங்கி பருப்பு கறி

nathan

சோயா சங்க்ஸ் பிரியாணி|soya chunks biryani

nathan

உருளைக்கிழங்கு கைமா கபாப்

nathan

கேப்ஸிகம் கிரேவி செய்ய வேண்டுமா….

nathan